புறப்பட்ட சில நொடிகளில்... விழுந்து நொறுங்கிய விமானம்: விமானி உட்பட அனைவரும் பலி

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
0Shares

பிரேசில் நாட்டில் பிரபல கால்பந்து அணியின் முக்கிய நிர்வாகி உள்ளிட்ட 6 பேர் குட்டி விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

பிரேசிலின் பிரபல கால்பந்து அணியான பால்மாஸ்-ன் தலைவர் உள்ளிட்ட ஐவருடன் விமானியும் இந்த விபத்தில் பலியாகியுள்ளனர்.

கோயானியா பகுதியில் நடைபெறவிருக்கும் கால்பந்து விளையாட்டு ஒன்றில் கலந்து கொள்ளும் பொருட்டு, பால்மாஸ் அணியின் நான்கு வீரர்களும் அந்த அணியின் தலைவரும் விமானம் ஒன்றில் புறப்பட்டுள்ளனர்.

ஆனால் விமானம் புறப்பட்டு சில நொடிகளில், திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து ஓடு தளத்திலேயே விழுந்து நொறுங்கியுள்ளது.

இந்த விபத்தில் பால்மாஸ் அணியின் முக்கிய நிர்வாகி, நான்கு விளையாட்டு வீரர்கள் மற்றும் விமானியும் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

விமானம் விபத்துக்குள்ளானதன் காரணம் தொடர்பில் இதுவரை உறுதியான தகவல் ஏதும் வெளியாகவில்லை.

2016-ல் பிரேசிலின் முக்கிய கால்பந்து அணியின் மொத்த வீரர்களும், அணி நிர்வாகிகள் உள்ளிட்ட 71 பேர் விமான விபத்தில் கொல்லப்பட்டனர்.

மெடலின், கொலம்பியா அருகே நடந்த இந்த கோர விபத்தில் அதிர்ஷ்டவசமாக 6 பேர் காயங்களுடன் உயிர் தப்பினர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்