உயரமான மலையில் இருந்து கீழே விழுந்த பேருந்து! 19 பேர் உயிரிழப்பு... நடந்தேறிய கோர சம்பவம்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்
0Shares

பிரேசிலில் பேருந்து ஒன்று மலைக்குன்றில் இருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் 19 பயணிகள் உயிரிழந்துள்ளனர்.

பிரேசிலில் பரானா மாகாணத்தில் தான் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.

அங்கு 53 பயணிகளை ஏற்றிக் கொண்டு பேருந்து ஒன்று புறப்பட்டு சென்றது.

அப்போது திடீரென அந்த பேருந்து நிலைதடுமாறி அருகில் இருந்த மலைக்குன்றில் இருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

இதில் பேருந்தில் பயணம் செய்த 19பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

விபத்து பற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்