கனவுகளுடன் விமானத்தில் புறப்பட்ட கால்பந்து வீரர்கள்! சில நொடிகளில் வெடித்து தீயில் இரையான சோகம்

Report Print Ragavan Ragavan in ஏனைய நாடுகள்
0Shares

பிரேசில் நாட்டில் விமானத்தில் சென்ற 4 கால்பந்து ஆட்டக்காரர்கள் மற்றும் அணியின் தலைவர் உட்பட 6 பேர் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சமத்துவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசில் நாட்டில் டொகாண்டின்ஸ் வாடமாநிலத்தில் உள்ள விமான நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு தனியார் விமான ஓடுபாதையிலிருந்து புறப்பட்டது. புறப்பட்ட சில நொடிகளில், 500 மீட்டர் தொலைவில் திடீரென அந்த விமானம் கீழே விழுந்து வெடித்தது.

விமானம் முழுக்க தீப்பிடித்த நிலையில் மீண்டும் ஒரு முறை வெடித்துள்ளது.

இந்த கோரமான விபத்தில் விமானத்தில் பயணித்த Palmas கால்பந்து அணியின் தலைவர், அணியில் 4 ஆட்டக்காரர்கள் மற்றும் விமானி ஆகிய 6 பேர் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர்.

அவர்கள் Goiânia பகுதியில் நடைபெறும் Copa Verde கால்பந்து போட்டிக்காக Vila Nova அணிக்கு எதிராக விளையாட புறப்பட்ட நிலையில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. விமானத்தில் இருந்த ஒருவரும் உயிர் தப்பவில்லை.

மேலும் இவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனையில் நேர்மறையான முடிவைப் பெற்ற நிலையில், அணியின் மற்ற ஆட்டக்காரர்களுடன் இல்லாமல் தனியாக விமானத்தில் பயணித்ததாகக் கூறப்படுகிறது.

பலியானவர்கள் கிளப் தலைவர் லூகாஸ் மீரா மற்றும் ஆட்டக்கார்கள் லூகாஸ் பிராக்செடிஸ், கில்ஹெர்ம் நோ, ரானுலே மற்றும் மார்கஸ் மோலினரி என அடையாளம் காணப்பட்டனர்.

இதேபோல், 2016-ல் பிரேசில் நாட்டில் 19 கால்பந்து ஆட்டக்காரர்கள் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் அனைவரும் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்