ஏற்கனவே தாய்லாந்துக்கு ஒரு ராணி இருக்க, ஒரு இளம்பெண்ணை நாட்டின் இரண்டாவது ராணியாக்கியிருக்கிறார் தாய்லாந்து மன்னர்.
எப்போதும் அழகிகளுடன் உலாவருபவர் தாய்லாந்து மன்னரான மஹா வஜிரலோங்கார்ன் (68). நாடே எதிர்த்தாலும் 100 இளம்பெண்களை அழைத்துக்கொண்டு, வேறொரு நாட்டில் ஹொட்டலில் அறை எடுத்து தங்கி உல்லாசம் அனுபவிக்கும் பிளேபாய் என்று பெயர் எடுத்தவர் வஜிரலோங்கார்ன்.
2019ஆம் ஆண்டு ஜூலை மாதம், தனது பிறந்தநாளின்போது, உலகில் எங்கும் இல்லாத நடைமுறையாக தனது பாதுகாவலராக இருந்த, பைலட்டான Sineenat Wongvajirapakdi (36) என்ற பெண்ணை அதிகாரப்பூர்வமாக ராஜ வைப்பாட்டியாக நியமித்தார் வஜிரலோங்கார்ன். மூன்றே மாதங்களில் ராணியின் இடத்தை பிடிக்க முயல்வதாக குற்றம் சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார் Sineenat.

பின்னர் விடுவிக்கப்பட்ட நிலையில், Sineenatஇன் 1,400 நிர்வாண படங்கள் கசிந்த விடயம் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.
என்ன நடக்குமோ என மக்கள் உற்றுக் கவனிக்க, யாரும் எதிர்பாராதவிதமாக, Sineenatஇன் 36ஆவது பிறந்தநாளில், அவரது பிறந்தநாள் பரிசாக Sineenatஐ நாட்டின் இரண்டாவது ராணியாக்கியிருக்கிறார் வஜிரலோங்கார்ன்.
பாங்காகில் ஒரே நிறந்தில் மேட்சாக உடை அணிந்துகொண்டு மன்னரும் இரண்டாவது ராணியும் புத்த முறைப்படி பிறந்தநாள் கொண்டாட்டங்களில் ஈடுபடும் படங்கள் வெளியாகியுள்ளன!
