ரஷ்யாவில், திருமணமான ஒரு செல்வந்தருடன் இரண்டு பெண்கள் தொடர்பிலிருந்திருக்கிறார்கள்.
மனோவியல் நிபுணரான Elena Sosnovskaya (40) என்ற பெண், செல்வந்தரான ஒருவருடன் தொடர்பிலிருந்திருக்கிறார். அந்த செல்வந்தருக்கு புகழ்பெற்ற நாட்டிய மங்கையான Natalia Pronina (30) என்ற காதலியும் இருந்துள்ளார்.
Elenaவுக்கு ஏற்கனவே ஒரு காதலனும் இருக்கிறார். என்றாலும் Natalia மீதான பொறாமையால் அவரைத் தீர்த்துக்கட்ட தனது காதலனின் உதவியை அவர் நாட, கூலிப்படையை ஏற்பாடு செய்து Nataliaவை அவரது நடனப் பயிற்சி நிலையத்தின் அருகிலேயே சுட்டுக்கொன்றிருக்கிறார்கள்.
பொலிசாரின் கவனம் முதலில் அந்த செல்வந்தரின் மனைவி மீதுதான் திரும்பியிருக்கிறது.
பின்னர் CCTV கமெரா ஒன்றில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் கொலைகாரன் சிக்கியிருக்கிறான்.
விசாரணையில், பொறாமை காரணமாக Elena, Nataliaவை கொலை செய்ய ஏற்பாடு செய்தது தெரியவர, Elena, அவரது காதலன், மற்றும் மூன்று பேரை பொலிசார் கைது செய்துள்ளார்கள்.
இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், ஏற்கனவே ஒருவருடன் வாழ்ந்துவந்த Elena, அவருடன் வாழ்ந்துகொண்டே அந்த செல்வந்தருடன் தவறான தொடர்பிலிருந்திருக்கிறார்.
தானே தவறானவளாக இருக்க, அவர் தன்னைப்போன்றே அந்த செல்வந்தருடன் தொடர்பிலிருந்த மற்றொரு பெண்ணை கொலை செய்துவிட்டு சிறைக்கு சென்றிருக்கிறார்.
அந்த பெண்கள் இருவரும் ஒவ்வொரு விதத்தில் வாழ்க்கையை தொலைத்துவிட்ட நிலையிலும், அவர்களுடன் உல்லாசம் அனுபவித்துவந்த அந்த செல்வந்தரின் பெயர் கூட வெளியிடப்படவில்லை!