சமீபத்தில், தாய்லாந்தைச் சேர்ந்த ஏழை மீனவர் ஒருவருக்கு அதிர்ஷ்டம் கனவில் வந்தது.
Hatchai Niyomdecha (37) என்பவரது கனவில் வெண்ணிற ஆடை தரித்த முதியவர் ஒருவர் வந்து, கடற்கரைக்கு சென்றால் அங்கு அவருக்கு ஒரு பரிசு கிடைக்கும் என கூற, அதன்படி மீன் பிடிக்கச் சென்றார் அவர்.
கனவில் சொல்லப்பட்டது போலவே அவருக்கு ஒரு அபூர்வ முத்து ஒன்று கிடைத்தது. அபூர்வமான அந்த ஆரஞ்சு நிற முத்தை வாங்க செல்வந்தர்கள் பலர் போட்டி போட்டார்கள். கடைசியாக சீன நாட்டவர் ஒருவர் அந்த முத்தை 250,000 பவுண்டுகளுக்கு வாங்கிக்கொள்வதாக தெரிவித்தார்.
இதற்கிடையில், முத்து கிடைத்த சந்தோஷத்தை கொண்டாட பார்ட்டி ஒன்றுக்கு ஏற்பாடு செய்தார் Hatchai.
பார்ட்டியில் பங்கேற்றவர்கள் போட்ட சத்தத்தால் எரிச்சலான அக்கம்பக்கத்தவர்கள் பொலிசாரிடம் புகார் கூற, Hatchai வீட்டுக்கு பொலிசார் வந்துள்ளனர்.
பொலிசார் அந்த வீட்டை ரெய்டு செய்ய, அங்கு ஆயிரக்கணக்கான போதை மாத்திரைகள் இருப்பதைக் கண்டுள்ளனர்.
அவை தன்னுடையவை அல்ல என முதலில் Hatchai மறுத்துள்ளார். ஆனால், போதை மருந்து பெட்டிகளில் Hatchaiஇன் கைரேகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் கைது செய்யப்பட்டுள்ளதால், அவர் கண்டுபிடித்த அபூர்வ முத்தை விற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது!