செய்யாத குற்றத்துக்காக பாதி வாழ்க்கையை சிறையில் கழித்த பரிதாபம்; இழப்பீடாக வழங்கப்பட்ட உட்சபட்ச தொகை!

Report Print Ragavan Ragavan in ஏனைய நாடுகள்
0Shares

போலந்தில் செய்யாத குற்றத்துக்காக 18 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த நபருக்கு இழப்பீடாக 2.5 மி. பவுண்ட் வழங்க நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போலந்தின் Wroclaw பகுதியில் 1996-ஆம் ஆண்டு 15 வயது சிறுமி ஒருவர் கற்பழித்து கொலை செய்யட்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த பொலிஸ், அவர்களுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் குற்றவாளியின் முகத்தை வரைந்துள்ளனர்.

அதன் அடிப்படையிலும், இறந்த பெண்ணின் உடலில் காணப்பட்ட காயங்களின் அடிப்படையில், 2000 ஆம் ஆண்டில் Tomasz Komenda எனும் 23 வயது இளைஞரை குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு 15 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார். பின்னர் அந்த தண்டனை காலம் 25 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டது.

Tomasz Komenda-வின் குடும்பத்தினர் செய்த முயற்சிகளின் விளைவாக, அவரது வழக்கு மறுபரிசீலனை செய்யப்பட்ட நிலையில் அவர் நிரபராதி என்ற தெரியவந்தது.

மேலும், இந்த கொலையை ஏற்கெனவே பல வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள வேரூ இரண்டு நபர்கள் தான் செய்துள்ளார் என்பது பொலிஸ் விசாரணையில் தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து அவர் 2018-ஆம் ஆண்டில் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். இப்போது அவருக்கு 44 வயது.

ஆனால், செய்யாத பாவத்துக்காக தன் வாழ்நாளின் பாதியை சிறையில் கழித்ததற்காகவும், சிறையிலேயே 3 முறை தற்கொலைக்கு முயற்சி செய்யும் அளவிற்கு மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டதற்காகவும் இழப்பீடாக 3.7 மில்லியன் பவுண்ட் கேட்டு Tomasz Komenda நீதிமன்றத்தை அணுகினார்.

இறுதியாக இப்போது, Tomasz Komendaவுக்கு இழப்பீடாக 2.5 மி. பவுண்ட் வழங்க நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது போலந்தில் இதுவரை யாருக்கு வழங்கப்படாத உட்சபடச்ச தொகையாகும்.

இவரது கதை போலந்தில் 25 Years of Innocence The Case of Tomek Komenda என படமாகவே வெளியானது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்