நியூசிலாந்தில் மீண்டும் அமுலுக்கு வந்த ஊரடங்கு: பிரதமர் ஜெசிந்தா அறிவிப்பு

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
0Shares

கொரோனா பரவல் காரணமாக ஆக்லாந்தில் முழு ஊரடங்கு அமுலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது எனவும், அடுத்த 3 நாட்களுக்கு அமுலில் இருக்கும் எனவும் பிரதமர் ஜெசிந்தா தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்தின் மிகப்பெரிய நகரான ஆக்லாந்தில் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மிக ஆபத்தான, பிரித்தானியாவில் உருமாற்றம் கண்ட கொரோனா பெருந்தொற்று இதுவென கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஆக்லாந்தில் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கு அடுத்த 3 நாட்களுக்கு அமுலில் இருக்கும் என பிரதமர் ஜெசிந்தா தெரிவித்துள்ளார்.

இந்த 3-ம் நிலை ஊரடங்கு கட்டுப்பாடுகளின்படி, மக்கள் அனைவரும் வீட்டுக்குள் இருக்க வேண்டும். அத்தியாவசிய பணிகள் மற்றும் பொருட்களை வாங்க மட்டுமே வெளியே வர வேண்டும்.

ஏற்கனவே கொரோனாவை கட்டுப்படுத்த நியூசிலாந்து மேற்கொண்ட அதே முயற்சிகளை மீண்டும் தீவிரமாக மேற்கொள்ளவிருப்பதாக பிரதமர் ஜெசிந்தா அரசு தெரிவித்துள்ளது.

இதனிடையே, ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய தொழில் நிறுவனங்கள் கேட்டுக் கொண்டுள்ளன. மாணவர்கள் பள்ளியிலிருந்து விலகி இருக்கும்படி கேட்டுக்கொண்டனர்.

ஒரே இரவில் பிராந்திய எல்லையில் எட்டு இடங்களில் காவல்துறையினர் சோதனைச் சாவடிகளை அமைத்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், அத்தியாவசியமற்ற பயணம் இல்லை என்பதை உறுதிப்படுத்த ஆக்லாந்துக்கு வரும் மற்றும் புறப்படும் அனைத்து வாகனங்களையும் அதிகாரிகள் சோதனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்