ஃபைசர் தடுப்பூசி தொழில்நுட்பத்தை திருட வட கொரியா முயற்சி! தென் கொரியா குற்றச்சாட்டு...

Report Print Ragavan Ragavan in ஏனைய நாடுகள்
0Shares

ஃபைசர் கம்ப்யூட்டர்களை ஹேக் செய்து கோவிட் தடுப்பூசி தொழில்நுட்பத்தை திருட வட கொரிய ஹேக்கர்கள் முயன்றதாக தென் கொரியா குற்றம் சாட்டியுள்ளது.

கடந்த ஆண்டு சந்தேகத்திற்குரிய வட கொரிய ஹேக்கர்கள் ஜான்சன் & ஜான்சன், நோவாவாக்ஸ் இன்க் மற்றும் அஸ்ட்ராஜெனெகா உள்ளிட்ட குறைந்தது 9 நிறுவனங்களுக்குள் நுழைந்து கோவிட் தடுப்பூசிக்கான தரவுகளை திருட முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது.

அதேபோல், கடந்த வாரம் விட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் ஒன்லைனில் ஹேக் செய்து 1.7 பில்லியன் டாலருக்கும் அதிகமான கிரிப்டோகரன்ஸியை திருடிவிட்டதாக அறிக்கைகள் வெளிவந்தன.

இந்நிலையில், தென் கொரியாவில் இயங்கிவரும் ஃபைசர் தடுப்பூசி நிறுவனத்தின் கணினிகளை ஹேக் செய்ய வட கொரியா முயற்சி செய்துள்ளதாகவும், அந்த முயற்சிகளை தோல்வியுற்றதாக தென் கொரியாவின் உளவுத்துறை நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த முயற்சி வெற்றிகரமாக முடிந்திருந்தால், கிம் ஜாங்-உன்னின் சர்வாதிகார ஆட்சி அதன் சொந்த ஜப்களை உருவாக்க அதைப் பயன்படுத்துவதை விட தகவல்களை விற்க முயற்சித்திருக்கும் என்று நிபுணர்கள் நம்புகிறார்கள்.

வட கொரியா இதுவரை எந்த ஒரு கொரோனா பாதிப்புகளையும் அதன் எண்ணிக்கையையும் வெளியிடாமல் ரகசியமாக வைத்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்