ஒரு வருடம் கழித்து பொதுவெளியில் தோன்றிய கிம் ஜாங் உன்னின் மனைவி ரி சோல் ஜூ!

Report Print Ragavan Ragavan in ஏனைய நாடுகள்
0Shares

வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னின் மனைவி ரி சோல் ஜூ ஒரு வருடம் கழித்து முதல் முறையாக புதன்கிழமை பொதுவெளியில் தோன்றி, பரவிவந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

முக்கிய பொது நிகழ்வுகளுக்கு கிம் ஜாங் உன்னுடன் அடிக்கடி சென்ற அவரது மனைவி ரி சோல் ஜூ, கடைசியாக கடந்த ஆண்டு ஜனவரி Lunar New Year விடுமுறைக்கான ஒரு நிகழ்வில் கலந்துகொண்டார்.​​

பின்னர் அவர் எந்த பொது நிகழ்விலும் கலந்துகொள்ளவில்லை. இதனால் அவர் உடல்நலக் குறைவு ஏற்பட்டிருக்கலாம் அல்லது கர்ப்பமாக இருக்கலாம் என ஊகங்கள் எழுந்தன.

இந்த நிலையில் தென் கொரியாவின் தேசிய புலனாய்வு சேவை (NIS) செவ்வாயன்று சட்டமன்ற உறுப்பினர்களிடம் ரி சோல், கொரோனா வைரஸிலிருந்து வரும் அபாயத்தைக் குறைப்பதற்காக வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்த்ததாககவும், தங்கள் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறியது.

இந்நிலையில், ரி சோல் ஜூ ஒரு வருடத்திற்குப் பிறகு முதல் முறையாக ஊடகங்களில் தோன்றியுள்ளார்.

கிம் மறைந்த தந்தையும் முன்னாள் தலைவருமான கிம் ஜாங் இல் பிறந்தநாளைக் குறிக்கும் நிகழ்வில் இன்று கிம் மற்றும் அவரது மனைவி ரி சோல் ஜோடியாக கலந்துகொண்ட புகைப்படங்களை அதிகாரப்பூர்வ செய்தித்தாள் Rodong Sinmun வெளியிட்டுள்ளது.

ரி மற்றும் கிம்முக்கு மூன்று குழந்தைகள் இருப்பதாக நம்பப்படுகிறது, ஆனால் அவர்களைப் பற்றிய அதிகாரப்பூர்வ விவரங்கள் இதுவரை அறியப்படவில்லை.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்