ஆங் சான் சூகி மீது மேலும் ஒரு கிரிமினல் குற்றச்சாட்டு! அமெரிக்கா மற்றும் பிரித்தானியா கண்டனம்

Report Print Ragavan Ragavan in ஏனைய நாடுகள்
0Shares

மியான்மர் அரசு தலைவர் ஆங் சான் சூகி மீது இரண்டாவது கிரிமினல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதற்கு அமேரிக்கா மற்றும் பிரித்தானியா கண்டனம் தெரிவித்துள்ளது.

மியான்மரில் கடந்த பிப்ரவரி 1-ஆம் திகதி ஜனநாயக ஆட்சி கவிழ்க்கப்பட்டு, தேர்தல் முறைகேடு தொடர்பாக அரசு தலைவர் ஆங் சான் சூகி உட்பட அரசு அதிகாரிகள் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்களை இராணுவம் கைது செய்தது.

இதனால் நாட்டில் மக்கள் புரட்சி தலைதூக்கியத்தியது. மியான்மர் குடிமக்கள் தொடர்ந்து 2வது வாரமாக இராணுவ சர்வாதிகாரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆங் சான் சூகியை விடுவிக்கவும் கோரி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னதாக ஆங் சான் சூகி, சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட வாக்கி-டாக்கீகளை தனது வீட்டில் வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.

இந்நிலையில், நாட்டின் இயற்கை பேரழிவு மேலாண்மை சட்டத்தை மீறியதாக ஆங் சான் சூகி மீது இரண்டாவது குற்றச்சாட்டு செவாய்க்கிழமை சுமத்தப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த இரண்டாவது குற்றச்சாட்டு என்ன என்பது தெளிவாக வெளியிடப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து, ஆங் சான் சூகி மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சட்டுகளுக்கு எதிராக பிரித்தானிய மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், "மியான்மரில் இராணுவ ஆட்சி தொடராது, விரைவில் பொது தேர்தல் நடத்தப்பட்டு வெற்றி பெறுபவரிடம் அதிகாரம் முறையாக ஒப்படைக்கப்படும்" என மியான்மர் இராணுவம் கூறிவருகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்