50,000 ஆண்டுகள் பழமையான விலங்குகளின் பிணங்களிலிருந்து வைரஸ்களை சேகரிக்கும் ரஷ்யா: மீண்டும் ஒரு கொள்ளைநோய் வெடிக்குமா?

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்
0Shares

ரஷ்ய அறிவியலாளர்கள், 50,000 ஆண்டுகள் பழமையான இறந்த விலங்குகளின் உடல்களிலிருந்து வைரஸ்களை சேகரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

ஏற்கனவே, கொரோனா என்றொரு கொலைகார வைரஸ் சீனாவால் பரப்பப்பட்டதாக ஒரு செய்தி உலகமெங்கும் உலாவரும் நிலையில், ரஷ்யாவின் இந்த ஆராய்ச்சியால் ஏதாவது தீங்கு ஏற்படுமா என்ற அச்சம் எழுந்துள்ளது.

இன்னொரு பக்கம், பழங்கால விலங்குகளை குளோனிங் மூலம் உருவாக்கும் ஒரு ஆய்வும் நடைபெற்று வருகிறது.

(ஜுராஸிக் பார்க் திரைப்படத்தில் உருவாக்கப்பட்ட டைனோசர்களால் நடந்த பயங்கரங்கள் நினைவுக்கு வந்துபோவதை தவிர்க்க இயலவில்லை) அறிவியலாளரான Dr Olesya Okhlopkova கூறும்போது, புராதன கால வைரஸ்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக இந்த ஆய்வு தொடங்கப்பட்டுள்ளது என்கிறார்.

வைரஸ்களின் பரிணாம வளர்ச்சி குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தாலும், இப்படி பழங்கால விலங்குகளிலிருந்து நுண்ணுயிர்களை மீண்டும் உருவாக்குவதால் zombie தொற்று உருவாகிவிடலாம் என எச்சரித்துள்ளார்கள் அறிவியலாளர்கள்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்