ஈராக்கில் நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி மற்றும் அமெரிக்கா ஆகிய ஐந்து நாடுகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன.
திங்கள்கிழமை இரவு இரவு 9:30 மணியளவில் எர்பில் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை பல ராக்கெட்டுகள் தாக்கியதில் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் அமெரிக்க வீரர் உட்பட 6 பேர் காயமடைந்தனர்.
Saraya Awliya al-Dam என்ற குழு இத்தாக்குலுக்கு பொறுப்பேற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Saraya Awliya al-Dam குழுவிற்கு ஈரானுடன் தொடர்புள்ளதாக சில ஈராக் அதிகாரிகளின் குற்றம்சாட்டை ஈரான் மறுத்துள்ளது.
இந்நிலையில், ஈராக்கிய குர்திஸ்தான் பிராந்தியத்தில் பிப்ரவரி 15 ஆம் திகதி நடந்த ராக்கெட் தாக்குதலை பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, பிரித்தானியா மற்றும் அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர்களாகிய நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம் என ஐந்து நாடுகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஈராக் மக்களுக்கு எங்கள் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
The moment the rockets fired from #Iranian backed Shia militias fell into downtown #Erbil. 2kms away from the #Erbil airport pic.twitter.com/0mynNDIO9U
— IntelOmarion (@IntelOmarion) February 15, 2021
மேலும் இந்த தாக்குதலுக்கு பொறுப்பானவர்களை பொறுப்பேற்க வைக்கும் நோக்கத்துடன், கூட்டாக எங்கள் அரசாங்கங்கள் தாக்குதல் தொடர்பான ஈராக் அரசாங்கத்தின் விசாரணையை ஆதரிக்கும் என தெரிவித்துள்ளன.