உலகிலேயே முதல் முறையாக மனிதர்களுக்கு பரவிய H5N8 பறவைக் காய்ச்சல்! எந்த நாட்டில் தெரியுமா?

Report Print Ragavan Ragavan in ஏனைய நாடுகள்
0Shares

H5N8 வகை பறவைக் காய்ச்சல் வைரஸ் பாதிப்புக்குள்ளான முதல் மனித வழக்கை ரஷ்யா பதிவு செய்துள்ளது.

சமீபத்திய மாதங்களில் ரஷ்யா, ஐரோப்பா, சீனா, மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவில் H5N8 பறவைக் காய்ச்சல் பரவத் தொடங்கியது. ஆனால் அவை பெரும்பாலும் கோழிப்பண்ணைகளில் மட்டுமே பாதித்தது.

ஆனால், இப்போது உலகிலேயே முதல் முறையாக ரஷ்யாவில் பறவைகளிடமிருந்து ஒரு மனிதருக்கு H5N8 Influenza வைரஸ் பரவியுள்ளது.

அதனைத் தொடர்ந்து ரஷ்யா இந்த முதல் மனித பாதிப்பை உலக சுகாதார அமைப்பிடம் (WHO) தெரிவித்தது. மேலும், இதுவரை இந்த காய்ச்சல் மனிதர்களிடையே பரவியதிகாக எந்த அறிகுறியும் இல்லை என தெரிவித்துள்ளது.

இதுவரை H5N1, H7N9 மாற்றும் H9N2 influenza வைரஸ்கள் மனிதர்களுக்கு பரவியதாக கூறப்படுகிறது. முதல் முறையாக H5N8 விகாரம் ஒரு மனிதருக்கு பரவியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்