நடுவானில் கோளாறான இன்ஜின்.. தரையில் மோதி சிதறிய விமானம்! பதற வைக்கும் காட்சி

Report Print Basu in ஏனைய நாடுகள்
0Shares

நைஜீரியாவில் விமானம் ஒன்று தரையில் மோதி விபத்துக்குள்ளாகி எரிந்த சாம்பலான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Abuja விமானநிலையத்திலே இந்த கோர விபத்து நடந்துள்ளது. நைஜீரியா விமான போக்குவரத்து துறை அமைச்சர் Hadi Sirika விமான விபத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் ட்விட்டரில் பதிவிட்டதாவது, Minna-வுக்கு செல்லும் வழியில் என்ஜின் கோளாறு என புகாரளித்த பின்னர் கிங் ஏர் 350 என்ற இராணுவ விமானம், Abuja விமான நிலையத்தின் ஓடுபாதையில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இது மிகவும் பயங்கரமான விபத்து என தெரிகிறது. நாம் அமைதியாக இருக்க வேண்டும் மற்றும் இராணுவத்தின் விசாரணையின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும், அதே நேரத்தில் விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டிருந்தால் அவர்களுக்காக பிரார்த்திக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது. எனினும், எத்தனை பேர் பயணித்தார்கள் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்