மனைவியின் எச்சரிக்கையை மீறி மோசமான ஒரு இடத்துக்கு சென்ற கணவன்... மனைவியின் கோபத்தால் பலியான உயிர்

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்
0Shares

பிரேசிலில் ஒரு குறிப்பிட்ட மதுபான விடுதிக்கு போகவேண்டாம் என ஒரு பெண் தன் கணவனை அடிக்கடி எச்சரித்திருக்கிறார்.

காரணம், அந்த மதுபான விடுதிக்கு பாலியல் தொழிலாளிகள் அடிக்கடி வருவார்களாம். ஆனால், தான் திரும்பத் திரும்பச் சொல்லியும் கேட்காமல் கணவன் அதே மதுபான விடுதிக்கு மீண்டும் சென்றுள்ளதை அறிந்த Dayane Rafaella de Silva Rodrigues (31) என்ற அந்த பெண், துப்பாக்கியுடன் அங்கு சென்றுள்ளார்.

அங்கே, ஒரு மேசையைச் சுற்றி இளம்பெண்களும் ஆண்களுமாக உட்கார்ந்திருக்க, Dayaneஉடைய கணவனும் ஒரு இளம்பெண்ணுக்கருகே உட்கார்ந்திருந்திருக்கிறார். அதைக் கண்ட Dayane, ஆத்திரத்தில் துப்பாக்கியை எடுத்து சரமாரியாக சுட்டிருக்கிறார்.

அவர் சுட்டதில், Dayaneஉடைய கணவனுக்கு அருகில் உட்கார்ந்திருந்த ஒரு இளம்பெண் தலையில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அந்த இளம்பெண்ணின் பெயர் Djaiane Batista Barros (26) என்று தெரியவந்துள்ளது. அத்துடன், மற்றொரு 24 வயது இளைஞரும் கையில் குண்டுக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொலிசார் Dayaneஐக் கைது செய்துள்ளார்கள். கொலை மற்றும் காயப்படுத்துதல் ஆகிய குற்றங்களுக்காக அவர் விசாரிக்கப்பட்டு வருகிறார்.

என்றாலும், இது திட்டமிட்ட கொலை அல்ல, ஆத்திரத்தில் செய்யப்பட்ட ஒரு செயல்தான் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்