மாரடைப்பில் இறந்த பின்னரும் பெண்ணை தூக்கில் போட்ட நாடு: பின்னணியை விவரிக்கும் செய்தி

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்
0Shares

ஈரானில், மாரடைப்பால் இறந்த பின்னரும், ஒரு பெண் தூக்கில் போடப்பட்டுள்ளார். Zahra Ismaili என்ற பெண், தனது கணவர், தன்னையும் தன் மகளையும் துஷ்பிரயோகம் செய்ததாகக்கூறி அவரைக் கொலை செய்ததாக, குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

Zahraவின் கணவர் ஒரு உளவுத்துறை அலுவலர் ஆவார். Zahraவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. தூக்கில் போடப்படுவதற்காக தூக்கு மேடைக்கு Zahra கொண்டுபோகப்பட்டபோது, அவருக்கு முன்னால் 16 குற்றவாளிகள் தூக்கில் போடப்படுவதற்காக வரிசையில் நின்றிருக்கிறார்கள்.

அவர்கள் தூக்கில் போடப்படுவதை பார்க்க Zahra கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார். ஆனால், மற்றவர்கள் தூக்கில் போடப்படுவதைப் பார்த்துக்கொண்டிருந்த Zahraவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்படவே, அவர் உயிரிழந்துவிட்டார்.

ஆனால், ஈரானைப் பொருத்தவரை, ஒருவர் மற்றொருவரைக் கொலை செய்துவிட்டால், இறந்தவருக்காக பழிக்குப் பழி வாங்கும் நடவடிக்கையாக, குற்றவாளி சட்டப்படி தூக்கில் போடப்படும்போது, தூக்கு கயிற்றில் தலை மாட்டப்பட்ட நிலையில் குற்றவாளி நிற்கும் நாற்காலியை பாதிக்கப்பட்டவரின் உறவினர் காலால் எட்டி உதைக்கவேண்டும்.

அவர்கள் அப்படி செய்தால்தான் அவர்களுக்கு நிம்மதி, நீதி கிடைத்ததாக பொருள். ஆனால், Zahra இறந்துபோனதால், அவரது கணவரின் உறவினர்களுக்கு நீதி கிடைக்காதே! ஆகவே, இறந்துபோன Zahraவின் உடலை தூக்கில் தொங்கவிட்டு, அவரது மாமியார் அவர் நிற்கவைக்கப்பட்டிருந்த நாற்காலியை காலால் எட்டி உதைத்திருக்கிறார். ஒரு உயிரற்ற உடலுக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டு, நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது!!!

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்