14 வயது சிறுமியை திருமணம் செய்த 62 வயது பாகிஸ்தான் எம்.பி

Report Print Ragavan Ragavan in ஏனைய நாடுகள்
0Shares

பாகிஸ்தான் தேசிய சட்டமன்ற உறுப்பினரான மவுலானா சலாவுதீன் அயூபி 14 வயது சிறுமியை திருமணம் செய்ததாக எழுந்த புகாரில் பொலிஸ் விசாரணை நடத்தி வருகிறது.

2018 முதல் பாகிஸ்தான் தேசிய சட்டமன்ற உறுப்பினரும், Muttahida Majlis-e-Amal அரசியல் கட்சியைச் சேர்ந்தவருமான மவுலானா சலாவுதீன் அயூபி 14 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டதாக பரபரப்பு தகவல் வெளியாகின.

சித்ரால் பகுதியில் பெண்களின் நலனுக்காக பணியாற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனம் இதுகுறித்து புகார் அளித்ததன் பேரில், இந்த விவகாரம் குறித்து விசாரித்து வருவதாக உள்ளூர் காவல்துறை தெரிவித்துள்ளது.

Dawn பத்திரிகையில் வெளியான அறிக்கையின்படி, சிறுமி Jughoor-ல் உள்ள அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியின் மாணவி என்றும், அங்கு அவர் பிறந்த தேதி அக்டோபர் 28, 2006 என பதிவாகியிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

அதாவது அச்சிறுமி பாகிஸ்தான் நாட்டின் சட்டத்தின் படி திருமண வயதை எட்டவில்லை என்பதைக் காட்டுகிறது.

Pakistan Observer வெளியிட்டுள்ள செய்தியின்படி, 62 வயதான மவுலானா அச்சிறுமியுடன் நிக்கா செய்துகொண்டதாகவும், முறையான திருமண விழா இன்னும் நடைபெறவில்லை என்றும் கூறியுள்ளது.

சித்ரல் காவல் அதிகாரிகள் சில நாட்களுக்கு முன்பு புகாரின் பேரில், சிறுமியின் வீட்டிற்கு சென்று விசாரித்துள்ளனர். ஆனால் அவரது தந்தை சிறுமியின் திருமணத்தை மறுத்துவிட்டார். மேலும், தனது மகளை 16 வயது வரை திருமணம் செய்துகொடுக்க மாட்டேன் என்று அவர் அதிகாரிகளுக்கு உறுதியளித்துள்ளார்.

இது குறித்து, மவுலானா சலாவுதீன் அயூபி தரப்பிலிருந்து எந்த தகவலும் வெளியாகவில்லை. மேலும் விசாரணை நடத்தப்படும் என கூறப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்