அமெரிக்க விமானங்களை விரட்டியடித்த ரஷ்ய போர் விமானம்! கடலுக்கு மேல் நடந்த பரபரப்பு சம்பவம்

Report Print Basu in ஏனைய நாடுகள்
0Shares

ரஷ்யா எல்லை நோக்கி வந்த இரண்டு அமெரிக்க போர் விமானங்களை தடுத்து திருப்பி அனுப்பியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் பாதுகாப்பு கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

சம்பவம் குறித்து ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் பாதுகாப்பு கட்டுப்பாட்டு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பால்டிக் கடலின் பொதுவான வான்வெளியின் வழியாக இரண்டு விமானங்கள் ரஷ்ய எல்லை நோக்கி வருவதை ரஷ்ய வான்வெளி பாதுகாப்பு கருவி மூலம் கண்டறியப்பட்டது.

விமானங்களை அடையாளம் காணவும், ரஷ்ய எல்லைக்குள் அத்துமீறி நுழைவதை தவிர்க்கவும், மேற்கு இராணுவ மாவட்டத்தின் விமான பாதுகாப்பு படை தளத்திலிருந்து Su-27 விமானம் புறப்பட்டது.

அந்த இரண்டு விமானங்கள் அமெரிக்காவின் B-1B என Su-27 விமானக்குழுவினர் அடையாளம் கண்டனர். பின் விமானங்களை தடுத்து திருப்பி அனுப்பி வைத்தனர்.

ரஷ்ய எல்லைக்குள் அத்துமீறி நுழைவதை அனுமதிக்க முடியாது. ரஷ்ய எல்லையிலிருந்து அமெரிக்க விமானங்கள் திரும்பிச்சென்ற பிறகு ரஷ்ய விமானம் பாதுகாப்பாக தளத்திற்கு திரும்பியது.

வான்வெளியைப் பயன்படுத்துவதற்கான சர்வதேச விதிகளின்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் பாதுகாப்பு கட்டுப்பாட்டு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்