உலகின் டாப் 10 கோடீஸ்வரர்களின் பட்டியலை வெளியிட்டது போர்ப்ஸ்! இந்த முறை யார் முதலிடத்தில் தெரியுமா?

Report Print Santhan in ஏனைய நாடுகள்
0Shares

உலகின் டாப் 10 செல்வந்தர்களின் பட்டியலை பிரபல போர்ப்ஸ் பத்திரிக்கை நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும், உலகின் செல்வந்தர்களின் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், இந்தாண்டிற்கான பட்டியலை நேற்று போர்ப்ஸ் வெளியிட்டது.

அதில்,அமேசான் நிறுவர் ஜெப் பெசாஸ் முதலிடத்தில் உள்ளார். இவரின் மொத்த சொத்து மதிப்பு 177 பில்லியன் அமெரிக்க டொலர் எனவும், இவருக்கு அடுத்த இடத்தில் டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் உள்ளதாகவும், அவரது சொத்து மதிப்பு 151 பில்லியன் அமெரிக்க டொலர் என்று குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஆண்டு போர்ப்ஸ் வெளியிட்ட செல்வந்தர்களின் பட்டியலில் எலான்மஸ்க் 31-வது இடத்தில் இருந்தார்.

தற்போது 28 இடங்கள் முன்னேறியுள்ளார். மூன்றாவது இடத்தில் LVMH தலைமை செயல் அதிகாரி பெர்னார்ட் அர்னால்ட் 150 பில்லியன் சொத்து மதிப்புடன் உள்ளார்.

அவரை தொடர்ந்து நான்காவது இடத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உரிமையாளர் பில் கேட்சும், ஐந்தாவது இடத்தில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்கும் உள்ளனர்.

இவர்களுக்கு அடுத்தடுத்த இடத்தில் வாரன் பபெட் மற்றும் லாரி எலிசன், லாரி பேஜ், Sergey Brin மற்றும் முகேஷ் அம்பானி ஆகியோர் உள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்