4 நாட்களாக குகையில் மாட்டிக்கொண்ட புத்த துறவி; 40 அடி ஆழத்தில் உயிரைப் பணயம் வைத்து மீட்ட 7 நீர் மூழ்காளர்கள்! ஆச்சரிய சம்பவம்

Report Print Ragavan Ragavan in ஏனைய நாடுகள்
0Shares

தாய்லாந்தில் ஒரு குகைக்குள் 4 நாட்களாக வெள்ளநீரில் சிக்கிய ஒரு புத்த துறவியை 7 டைவர்ஸ் கடின முயற்சியால் மீட்கப்பட்டுள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாய்லாந்தில் உள்ள பல குகைகளில் புனிதமாகக் கருதப்படும் இடங்களில் சிவாலயங்கள் உள்ளன. அங்கு புத்த துறவிகள் நீண்ட தியானத்தில் ஈடுபடுவது வழக்கம்.

இந்த நிலையில், 46 வயதான துறவி Phra Manas, சனிக்கிழமையன்று தியானம் செய்வதற்காக Phitsanulok மாகாணத்தில் உள்ள Tham Phra Sai Ngam குகைக்குள் நுழைந்துள்ளார்.

துறவி உள்ளே இருந்தபோது, ​​இடியுடன் கூடிய கனமழை பெய்ததில் குகைக்குள் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்தது, சில நிமிடங்களில் நுழைவாயில் வெள்ளத்தால் மூடப்பட்டுள்ளது.

அந்தநேரத்தில் துறவி Phra Manas குகைக்குள் இருப்பதிலேயே உயர்ந்த இடத்துக்கு சென்று உட்கார்ந்து, செய்வதறியாது உள்ளேயே மாட்டிக்கொண்டார்.

அவர் ஒவ்வொரு ஏப்ரல் மாதமும் வேறொரு மாகாணத்திலிருந்து அந்த குகையில் தியானம் செய்ய யாத்திரை மேற்கொள்வாரம்.

மழை நின்ற பிறகும் மூன்று நாட்களாக துறவி திரும்பி வராமல் இருந்ததை அறிந்த ​​கிராமவாசிகள் உள்ளூர் அதிகாரிகளை எச்சரித்துள்ளனர்.

இதனையடுத்து, நீர் மூழ்காளர்கள் (Divers), மருத்துவர்கள் மற்றும் பிற நிபுணர்கள் உட்பட நூற்றுக்கணக்கான மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்தில் கூடினர்.

இன்று (புதன்கிழமை) காலை 7 டைவர்ஸ் டைவிங் மாஸ்க் போட்டு, 12 மீட்டர் (39 அடி) கீழே குகைக்குள் சென்று துறவியைக் கண்டுபிடித்தனர்.

அவருக்கும் ஆக்சிஜன் மாஸ்க் கொடுக்கப்பட்டு மீட்டு மேல அழைத்து வந்தனர்.

நான்கு நாட்களாக குகைக்கு உயிரைக் காப்பாற்றிக்கொண்டதும், அவரை கிட்டத்தட்ட 40 அடி ஆழத்தில் சென்று நீர் மூழ்காளர்கள் காப்பாற்றி கொண்டுவந்ததும் ஆச்சரியமாக பேசப்படுகிறது.

இந்த சம்பவம், 2018-ஆம் ஆண்டு இதேபோல் வடக்கில் Chiang Rai மாகாணத்தில் உள்ள ஒரு குகைக்குள் இரண்டு வாரங்களுக்கும் மேலாக சிக்கிய 12 சிறுவர்கள் மற்றும் அவர்களது பயிற்சியாளர் உள்ளிட்ட ஒரு கால்பந்து அணியை தாய்லாந்து கடற்படை சீல்கள் (Thai Navy Seals) மற்றும் குகை டைவர்ஸ் மற்றும் நூற்றுக்கணக்கான உதவியாளர்களின் சர்வதேச குழு இணைந்து மீட்டு கொண்டுவந்த சம்பவம் நினைவூட்டப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்