திருமணத்தின் போது ஷார்ட்சுடன் வந்த மாப்பிள்ளை! அழகில் ஜொலித்த மணப் பெண்: வைரலாகும் புகைப்படத்தின் சோகப் பின்னணி

Report Print Santhan in ஏனைய நாடுகள்
0Shares

இந்தோனேஷியாவில் திருமணத்தின் போது மாப்பிள்ளை காயங்களுடன் வெறும் ஷார்ட்ஸ் மட்டும் அணிந்து வந்து உட்கார்ந்திருக்கும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தோனேஷியாவின் கிழக்கு ஜாவா பகுதியைச் சேர்ந்த ஒரு இளம் ஜோடிக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்த திருமணம் கடந்த 2-ஆம் திகதி நடைபெற்றுள்ளது. அப்போது மணப் பெண் அழகாக ஜொலிக்க, அவரை திருமணம் செய்து கொள்ளும் மாப்பிள்ளையோ, உடலில் காயங்களுடன் ஒரு ஷார்ட்ஸ் மட்டும் அணிந்த படி, திருமணம் செய்யும் இடத்திற்கு வந்து அமர்ந்தார்.

இதைக் கண்ட அங்கிருந்த சிலர் இதைப் புகைப்படமாக எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட, அது அதிக அளவில் பகிரப்பட்டது.

@br0wski என்ற இணையவாசி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், இந்த புகைப்படத்தை வெளியிட, அது 14500-க்கும் மேற்பட்ட லைக்குகளையும், 2500-க்கும் மேற்பட்ட ரீடுவிட்களையும் பெற்றது.

இதைக் கண்ட இணையவாசிகள் பலரும் கிண்டலான கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.

ஆனால், இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், கடந்த 2-ஆம் திகதி சுப்ராப்டோ என்பவரை எலிண்டா டிவி கிறிஸ்டியானி என்ற பெண் திருமணம் செய்து கொண்டார்.

இவர்களின் திருமணம் இந்தோனேஷியாவின் கிழக்கு ஜாவாவின் நங்கன்ஜுக் ரீஜென்சியில் உள்ள லெங்காங் பகுதியில் நடைபெற்றுள்ளது.

இதில், மாப்பிள்ளை ஆடை அணியாமல், உடலில் காயங்களுடன் இருந்தார். இதற்கு எலிண்டா டிவி கிறிஸ்டியானி கூறுகையில், திருமணத்திற்கு சில தினங்களுக்கு முன்பு, அவர் பெட்ரோல் வாங்குவதற்காக வெளியில் சென்றுள்ளார்.

அப்போது ஏற்பட்ட விபத்தினால் உடலில் காயங்கள் ஏற்பட்டது. இதனால் அவரால் உடல் முழுவதும் ஆடை அணிய முடியாது. அதுமட்டுமின்றி அவர் அந்த விபத்தின் காரணமாக திடீரென்று சுயநினைவை இழந்ததாக கூறினார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்