இப்படியெல்லாம் செய்யாதே! பேருந்தில் கர்ப்பிணி பெண் மீது பாலியல் தாக்குதல் நடத்திய நபர்...அருகிலிருந்த கணவன் செய்த செயல்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்
0Shares

அமெரிக்காவில் பேருந்தில் கர்ப்பணி பெண்ணிடம் பாலியல் தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒக்லஹொமா சிட்டில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

19 வயதான கர்ப்பிணி பெண் ஒருவர் பேருந்தில் பயணம் செய்திருக்கிறார்.

அவருக்கு பின்னால் இருந்த பேட்ரிக் டெரி என்பவர் அப்பெண் உடல் மீது கை வைத்து பாலியல் தாக்குதல் நடத்தியிருக்கிறார். இதையடுத்து அதிர்ச்சியடைந்த அப்பெண் இப்படியெல்லாம் செய்யாதே என எச்சரித்தார்.

அதற்கு பதிலளித்த பேட்ரிக், நான் விரும்பியதை தான் செய்வேன், தேவைப்பட்டால் உன்னை துஷ்பிரயோகம் செய்வேன் என கூறியிருக்கிறார்.

இதையெல்லாம் அப்பெண்ணின் கணவரும், வேறு சில பயணிகளும் பார்த்தனர்.

இது குறித்து கணவன் உடனடியாக அளித்த புகாரின் பேரில் பேட்ரிக் பேருந்தில் இருந்து இறக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.

தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர் மீது சில பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்