கூகுள் மேப்பால் தவறுதலாக வேறு திருமண மண்டபத்துக்கு சென்ற மாப்பிள்ளை! அதிர்ச்சியடைந்த மணப்பெண்... தலைசுற்ற வைக்கும் சம்பவம்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்
0Shares

இந்தோனேசியாவில் கூகுள் மேப் குளறுபடியால் தனது மணப்பெண்ணுக்கு பதிலாக வேறு பெண்ணை திருமணம் செய்ய மணமகன் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தோனேசியாவில் உள்ள ஒரு கிராமத்தில் இரண்டு இடங்களில் ஒரே நாளில் 2 திருமண நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

அந்த இரண்டு இடங்களில் ஒரு இடத்துக்கு வர வேண்டிய மணமகன் ஒருவர் கூகுள் மேப் மூலம் மற்றொரு திருமணம் நடக்கும் இடத்திற்கு வந்திருக்கிறார்.

அந்த சமயத்தில் அங்கிருந்த மணப்பெண் அலங்காரம் செய்து கொண்டிருந்தார்.

அங்கு வந்திருப்பவர் அப்பெண்ணை மணக்கவிருக்கும் மணமகன் தான் என அனைவரும் நினைத்திருந்தனர்.

ஆனால் அவருடன் வந்த நண்பர் பின்னரே தான் வேறு இடத்துக்கு தவறுதாக வந்துவிட்டோம் என்பதை உணர்ந்து அனைவரிடமும் மன்னிப்பு கேட்டு அங்கிருந்து அவர்கள் கிளம்பி சென்றனர்.

இது குறித்து அங்கிருந்த மணப்பெண் உல்பா (27) கூறுகையில், என் வருங்கால கணவருக்கு பதிலாக வேறு நபர் இங்கு வந்ததை நான் முதலில் உணரவில்லை.

கூகுள் மேப் மூலம் அவர்கள் இங்கு வந்துவிட்டனர், விலாசத்தை தேடுவதில் குழப்பம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

அவர்கள் அனைவரையும் பார்த்த போது நான் அதிர்ச்சியடைந்தேன், ஏனென்றால் யாரையுமே எனக்கு அடையாளம் தெரியவில்லை.

என்னை திருமணம் செய்து கொள்பவர் சிறிது தாமதமாக வந்தார்.

நல்லவேளையாக எந்தவொரு தவறும் நடக்கவில்லை என கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்