ஊடக சுதந்திரத்தில் இலங்கைக்கு 141ஆவது இடம்!

Report Print Our Reporter Our Reporter in ஏனையவை
 ஊடக சுதந்திரத்தில் இலங்கைக்கு 141ஆவது இடம்!
1Shares
1Shares
ibctamil.com

2016ஆம் ஆண்டுக்கான உலக ஊடக சுதந்திர தரவரிசைப் பட்டியலில், இலங்கைக்கு 141ஆவது இடம் வழங்கப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டுக்கான உலக ஊடக சுதந்திர தர வரிசைப்பட்டியலை ஆர்.எஸ்.எவ் எனப்படும், எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு வெளியிட்டுள்ளது.

180 நாடுகளை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த பட்டியலில் இலங்கைக்கு 141ஆவது இடம் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையை தவிரந்த ஏனைய தெற்காசிய நாடுகளான இந்தியா 133ஆவது இடத்திலும், ஆப்கானிஸ்தான் 120ஆவது இடத்திலும், நேபாளம் 105ஆவது இடத்திலும், பூட்டான் 95ஆவது இடத்திலும் உள்ளன.

குறித்த பட்டியலில் ஆறாவது முறையாகவும் பின்லாந்து முதலிடம் பிடித்துள்ளது. அத்ற்கு அடுத்தப்படியாக நெதர்லாந்து மற்றும் நோர்வே ஆகிய நாடுகள் இடம்பிடித்துள்ளன.

துர்க்மெனிஸ்தான், வடகொரியா, எரித்ரியா ஆகிய நாடுகள் இப்பட்டியலில் கடைசி மூன்று இடங்களைப் பிடித்துள்ளன.

இதேவேளை, குறித்த பட்டியில் கடந்த ஆண்டு இலங்கை 165ஆவது இடத்தினை பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனையவை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments