தொடங்கவுள்ள சர்ச்சைக்குரிய பசுபிக் குப்பைகளை அகற்றும் பணிகள்

Report Print Givitharan Givitharan in ஏனையவை
73Shares
73Shares
lankasrimarket.com

வரும் செப்ரெம்பர் 8 ஆம் திகதியன்று மிகப்பெரிய மற்றும் சர்ச்சைக்குரிய பிளாஸ்டிக் அகற்றும் பணிகள் பசுபிக் கடலில் ஆரம்பிக்கப்பட்வுள்ளன.

இப் பணியின் நோக்கம் முக்கிய கடற் பரப்பிலிருந்து பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவது.

வட பசுபிக் சமுத்திரம், 2050 அளவில் இப்பகுதியிலுள்ள பிளாஸ்டிக்கின் அளவு மீன்களைின் அளவை மிஞ்சும் என எதிர்வு கூறப்படுகிறது.

இங்குள்ள குப்பைகள் கடல் வாழ் உயிரினங்களை பாதிக்கின்றது. மனித வாழ்க்கைக்குரிய சூழல் தொகுதியை அழிக்கின்றது. மீன்கள் இரசாயனங்களை உள்ளெடுக்கின்றது, விளைவாக கடல் உணவை உட்கொள்ளும் மனிதர்களையும் அது பாதிக்கின்றது.

என்னதான் பிளாஸ்டிக் மாசாக்கத்தை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டுமெனிலும், சில நிபுணர்கள் இத் திட்டம் வினைத்திறனற்ற ஒரு செயன்முறை என்கின்றனர், இது நன்மைகளை விட அதிக தீமைகளை தரக்கூடும் என வற்புறுத்துகின்றனர்.

ஒவ்வொரு வருடமும் கிட்டத்தட்ட 320 மில்லியன் மெட்ரிக் தொன் பிளாஸ்டிக் உற்பத்தி செய்யப்படுகிறது. சிறு பிளாஸ்டிக் கூட கடலில் வீசப்பட்டு அதன் அடியில் புதைக்கப்படுகிறது அல்லது கடல் நீரேதட்டத்தின் மூலம் நகர்த்தப்படுகிறது.

இவற்றில் பெரும்பாலானவை சுழிகள் என அழைக்கப்படும் பெரும் சமுத்திரப்பகுதிகளை அடைகின்றன. இப் பகுதிகளே பெரும்பாலும் கடல் மாசகற்றும் பணிகளுக்காக தேர்வு செய்யப்படுகின்றன.

ஆய்வுகளின் படி கடலில் கிட்டத்தட்ட 79 000 மெற்றிக் தொன் எடையுள்ள, 1.8 திரில்லியன் பிளாஸ்டிக் துண்டுகள் காணப்படலாம் என மதிக்கப்படுகிறது. இதில் 1.7 திரில்லியன் ஆனவை நுண் பிளாஸ்டிக். ஆனாலும் 90 வீதமான எடை பெரும் பிளாஸ்டிக்கிலிருந்தே வருகிறது. இவை பின்னர் சிறு பிளாஸ்டிக்காக உடைக்கப்படகிறது.

கடல் மாசகற்றும் குழுவினர் பெரும்பாலும் மேற்பரப்பிற்கு அண்மையாகவுள்ள பெரும் பிளாஸ்டிக்கையே அகற்றுகின்றனர். ஆனாலும் பெரும்பாலானலை கடலின் ஆழமான பகுதிகளிலேயே காணப்படுகின்றன. இது இப் பணிகளை மிகவும் சிக்கலானதாக ஆக்குவதடன், இலகுவில் அடையப்படமுடியாத நடவடிக்கையாகவும் பார்க்கப்படுகிறது.

மேலும் ஏனையவை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்