ஒரு புத்துயிரளிக்கப்பட்ட பரம்பரையலகு யானைகளை புற்றுநோயிலிருந்து காக்கலாம்

Report Print Givitharan Givitharan in ஏனையவை

யானைகள் அரிதாகவே புற்றுநோய்க்கு ஆளாகின்றன. புதிதாக அடையாளங்காணப்பட்ட பரம்ரையலகொன்று மிருகங்களை நோயிலிருந்து பாதுகாக்கக்கூடும் என தெரியவருகின்றது.

யானைகனின் வரலாறு மீதான ஆழமான ஆய்வொன்று ஒரு செயலிழந்துபோன பரம்பரையலகு பற்றிய தகவல்களை வெளிக்கொணர்வதாக உள்ளது.

இது LIF6, கிட்டத்தட்ட 59 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் புத்துயிரளிக்கப்பட்டிருந்தது. இந்தக் காலத்தில் யானைகளின் மூதாதையர் பெரியளவில் வளரத்தொடங்கியிருந்தனர்.

LIF6 ஆனது TP53 எனும் மற்றுமொரு பரம்பரையலகினால் தூண்டப்படுகிறது. இதனால் கலங்கள் புற்றுநோய்குரிய அறிகுறியை காட்டமுன் அகற்றப்படுகின்றன.

ஆனாலும் எவ்வாறு TP53 மற்றும் LIF6 யானைகளில் புற்றுநோய்க்கெதிராக போராட உதவுகின்றது என்பது பற்றி விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளன.

மேலும் ஏனையவை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...