தமது உயரத்தை மிகைப்படுத்திக் காட்டும் ஆண் நாய்கள்

Report Print Givitharan Givitharan in ஏனையவை

பொது இடங்களில் நாய்கள் முடிந்தவரை உயர்வான இடங்களை மையப்படுத்தி சிறுநீர் கழிப்பதை அவதானித்திருக்கக் கூடும். அதன் பின்னால் ஒரு முக்கிய காரணமேயுள்ளது. இவை மற்றைய நாய்களுக்கு தமது பருமனை மிகைப்டுத்திக் காட்டவே இவ்வாறு செய்கின்றன.

இச் சிறுநீர் அடையாளங்காட்டியானது அவைகளினது பிரதேசத்தை பிரதிநிதிப்படுத்துவதுடன், மற்றைய நாய்களுக்கான அழைப்பிதழாகவும் உள்ளது.

ஆனால் ஒரு புதிய ஆய்வானது சிறு நாய்களுக்கு இவை சிறுநீர் கழிக்கும் உயரம் எவ்வளவு முக்கியம் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

நியுயோர்க்கைச் சேர்ந்த ஆய்வாளர்கள் 45 ஆண் நாய்களின் சிறுநீர் கழிக்கும் முறைகளை ஆராய்ந்திருந்தனர். இதன்போது சிறிய நாய்கள் அடிக்கடி சிறுநீர் கழிப்பதையும், பொதுவாக அவை மரங்கள் போன்ற உயர்வான இலக்குகளை குறிவைப்பதையும் அவதானிக்க முடிந்திருக்கின்றது.

சிறிய நாய்கள் தமது உயரத்தை மிகைப்படுத்திக் காட்டுவதற்கென மேலதிக முயற்சிகளையும் எடுக்கின்றது.

பொதுவாக நாய்களின் சிறுநீரானது அவற்றின் வயது, ஆரோக்கியம் மற்றும் பாலுணர்வு தொடர்பான வாசனை ரீதியிலான நேர்மையான செய்தியாக இருக்கின்றது. ஆனாலும் நாய்கள் தமது உயரத்தை மிகைப்படுத்திக் காட்டுவது ஒரு நேர்மையற்ற செயலாகவே பார்க்கப்படுகின்றது.

நாய்கள் இவ்வாறு மற்றைய நாய்களுக்கு தம் உயரத்தை உயரத்தை மிகைப்படுத்திக் காட்டுவது ஒரே அணியினுள் ஒன்று சேர்வதற்கு. மற்றும் அடிக்கடி சிறுநீர் கழிப்பது தமது பௌதீக ரீதியிலான, முகத்திற்கு முகமான சந்திப்பை புறக்கணிப்பதற்காகவாக என அனுமானிக்கப்படுகிறது.

முன்னர் பன்டா மற்றும் மென்ங்கூஸ் போன்றன இவ்வாறான இயல்புகளைக் காட்டுவது அறியப்பட்டிருந்தது. தற்போது அப் பட்டியலில் நாய்களும் இணைந்துள்ளது.

மேலும் ஏனையவை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers