2004 ஆம் ஆண்டு தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட்டு 26 ஆம் திகதி தேசிய நாய்கள் தினமாக அமெரிக்கர்களால் கொண்டாடப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இத் தினம் கூடுகளில் அடைத்து வளர்க்கப்படும் நாய்களின் அவலநிலை தொடர்பாக விழிப்புணர்வுகளை ஏற்படுத்தவும், அவற்றைத் தத்தெடுக்கும் பழக்கங்களை ஊக்குவிக்கவும் என ஒரு மிருக வழக்கறிஞர் ஒருவரால் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.
மனிதர்கள் நாய்கள் மீது ஏன் அதிக அன்பு வைக்கின்றார்கள் என்பது தொடர்பாக எண்ணற்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
பொதுவாக மனிதர்கள் நாய்களை தமது உற்ற நண்பனாக, குடும்பத்தில் ஒரு அங்கமாக பேணி வளர்க்கின்றனர்.
இதன் மூலம் தமக்கு வேண்டிய சந்தோசம் கிடைப்பதாக அவற்றின் உரிமையாளர்கள் சொல்கின்றனர்.