பகலில் மாத்திரம் மிதக்கும் பாசிப் பந்தின் ரகசியம் கண்டுபிடிப்பு

Report Print Givitharan Givitharan in ஏனையவை

"Aarimo Algae" என அழைக்கப்படும் பச்சைக் கோள வடிவிலான ஒருவகை பாசிப் பந்து தொடர்பில் சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளியாகிள்ளது.

இது நாள்தோறும் காலையில் நீரின் மேற்பரப்பிற்கு வருகிறது, மாலையானதும் மீண்டும் அடித்தளத்திற்கு சென்றுவிடுகிறது.

தற்போது விஞ்ஞானிகள் இதன் தினசரி நிகழ்வுக்குப் பின்னாலுள்ள ரகசியத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.

Aegagropila linnaei எனப்படும் இவ் நீர் வாழ்க்கைக்குரிய அல்காவானது மற்றைய அல்காக்களைப் போன்றே மிதக்கின்றது.

ஆனாலும் இதன் அசைவிற்குப் பின்னால் ஒளித்தொகுப்புச் செயன்முறை தொடர்புபட்டிருக்கலாம் என எண்ணி ஆய்வாளர்கள் இதன்மீது கவனத்தை திருப்பியிருந்தனர்.

இவை ஒளித்தொகுப்பை மேற்கொள்ளும்போது ஒட்சிசனை வெளிவிடுகின்றன.

இவ் ஒட்சிசன் அதன் நாரிழைகளில் சிறைப்படுவதால் அவற்றிற்கு இந்த மிதக்கும் இயல்பு வருவதாக சந்தேகித்திருந்தனர்.

இதற்கென அவர்கள் இரசாயனப் படை மூலம் அவற்றின் ஒளித்தொகுப்பைக் கட்டுப்படுத்தியிருந்தபோது மேற்படி மிதக்கும் இயல்பு இல்லாது போயிருந்தது.

இதேநேரம் மேற்படி இரசாயன பூச்சு பூசப்படாத அல்காக்கள் வழமையான மிதக்கும் தன்மைக்கு காரணமாக இருந்துள்ளன.

மேலும் இவை அதிக பிரகாசமான ஒளி வழங்கப்பட்டிருந்தபோது மிக விரைவாக நீரின் மேற்பரப்பிற்கு அசைவதைக் காணமுடிந்திருக்கின்றது.

துரதிஷ்டவசமாக இவ் அல்கா இனங்களின் குடித்தொகை அழிந்துகொண்டு வருகின்றது.

தற்போது அரை மடங்காகவே ஏரிகளிலேயே இவற்றைக் காணமுடிகின்றது என விஞ்ஞானி Dora Cano தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனையவை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்