ஒரே நேரத்தில் இருமொழிகளை மாற்றி மாற்றி கதைக்க முடியுமா?

Report Print Givitharan Givitharan in ஏனையவை

அண்மையில் ஒரே சமயத்தில் இரு மொழிகளை மாற்றி மாற்றிப் பயன்படுத்தும்போது மூளையில் நடைபெறும் செயற்பாடு தொடர்பாக ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது.

கற்பனையில் இருமொழிகளை மாற்றிமாற்றி கதைப்பதென்பது இலகுவானதாகத் தென்பட்டாலும் மூளையின் ஒரு சிக்கலான செயற்பாடே இதை ஒழங்குபடுத்துவதாக தெரியவருகிறது.

இச்செயற்பாட்டின் மூலமே அவ்விரு தனித்தனியான மொழிகளுக்கிடையில் வெற்றிகரமான ஒத்திசைவு ஏற்படுத்தப்படுகிறது.

மொழிகள் மாற்றப்படும் தருணத்தில் முன்னர் பயன்படுத்திக்கொண்டிருந்த மொழி நிறுத்தப்பட்டு அடுத்த மொழிக்கான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படுகின்றன.

இங்கு மேற்கொள்ளப்பட்டிருந்த ஆய்வில் மொழியின் நிறுத்தல் செயற்பாடு அறிவாற்றல் கட்டுப்பாட்டு மையத்தால் கட்டுப்படுத்தப்படுவதாகவும், அடுத்த மொழிக்கான ஆரம்பம் எந்த முயற்சியுமின்றி தொடர்வதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனையவை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers