1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த காதல் சூத்திரம்

Report Print Givitharan Givitharan in ஏனையவை

கிட்டத்தட்ட 1,300 வருடங்கள் பழமைவாய்ந்ததெனக் கருதப்படும் எகிப்திய எழுத்துருவொன்றின் பொருள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன் பொருள் "காதல் தான் நோக்கம்" என அறியப்பட்டுள்ளது.

மேலும் இந்த மாயக் குறிப்பில் ஒன்றையொன்று நோக்கியவாறான இரு பறவைகளின் உருவங்கள் வரையப்பட்டுள்ளதுடன், சில வசனங்களும் இடம்பெற்றுள்ளன.

இவ் வசனங்கள் எகிப்திய மொழியில் இடம்பெற்றுள்ளது.

இங்கு வரையப்பட்டுள்ள உருவானது எழுத்திலுள்ள உணர்வை மேலும் வலுப்படுத்தவென வரையப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

Korshi Dosoo எனும் பிரான்ஸ் நாட்டு ஆய்வாளர் மேற்கொண்டிருந்த பகுப்பாய்விலேயே இத்தகவல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவரது ஆய்வு தற்போது Journal of Coptic Studies எனும் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனையவை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers