மீன்களை உணவாகக்கொள்ளும் விசித்திர கும்பிடு பூச்சி

Report Print Givitharan Givitharan in ஏனையவை

கும்பிடு பூச்சியானது பல்வேறு உயிரினங்களை இரையாக உட்கொள்வது சாதாரண விடயம்.

ஆனாலும் இப்பட்டியலில் மீன்களும் இருக்குமென விஞ்ஞானிகள் இதுவரை நம்பியிருக்கவில்லை.

ஆம், தற்போது இந்தியாவில் ஒருவகை கும்பிடு பூச்சி மீண்டும் மீண்டும் நன்னீர் மீன்களை உணவாக உட்கொள்வது கண்டறியப்பட்டுள்ளது.

கும்பிடு பூச்சிகள் பொதுமைப்பட்ட இரைகௌவிகளாக இருந்த போதிலும் அவை அதிகம் பூச்சிகளை உட்கொள்வனவாகவே அறியப்பட்டிருந்தன.

ஆனால் இவை மீன்களை இரைகொள்வது அறியப்படுவது இதுவே முதன்முறை.

இந்தியா - கர்னாடகாவைச் சேர்ந்த Rajesh Puttaswamaiah எனும் ஆய்வாளர், தனது தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த செயற்கைத் தடாகத்தில் கும்மிடு பூச்சிகள் மீன்களை வேட்டையாடுவதைப் பார்த்துள்ளார்.

இவர் தொடர்ச்சியாக 5 நாட்களுக்கு இச் சம்பவத்தை அவதானிக்க முடிந்திருக்கிறது.

அங்குவந்த கும்பிடு பூச்சி ஒரு மீனை விழுங்கிய 10 - 3- நிமிடங்களின் பின்னர் அடுத்த மீன் என ஒரு நாளைக்கு 2 மீன்களை உண்பதை இவர் கண்காணித்துள்ளார்.

மேலும் இவை இரவு வேளைகளில் அதாவது சூரிய அஸ்தமனத்துக்குப் பின்னராக மீன்களை வேட்டையாடுவதையும் .இவரால் அவதானிக்க முடிந்திருக்கிறது.

மேலும் ஏனையவை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers