பனாமா புதைகுழி தொடர்பான திடுக்கிடும் தகவல்கள்

Report Print Givitharan Givitharan in ஏனையவை

1954 இல் Samuel Lothrop எனும் தொல்பொருள் ஆய்வாளர் பனாமா புதைகுழி தொடர்பான பயங்கரத் தகவல்களை வெளியிட்டிருந்தார்.

உடல் வெட்டப்படுதல், தலை துண்டாடப்படுதல், தியாகம், உருச்சிதைவு, மக்கள் உயிருடன் புதைக்கப்படுதல், தன்னினமுண்ணல், என்புகளிலிருந்து தசை பிரித்தெடுக்கப்படல் பேன்றன அங்கு காணப்பட்டிருந்ததாகவும், இவை வெற்றியை நோக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டிருந்ததாகவும் சொல்லப்பட்டிருந்தது.

Samuel Lothrop இன் ஆய்வு பின்னர் 35 தடவைக்கு மேலாக மற்றைய ஆய்வாளர்களால் அந் நாகரீக மக்களின் மூர்க்கத்தனத்திற்கு மேற்கோள் காட்டப்பட்டிருந்தது.

ஆனால் இதிலுள்ள பெரிய பிரச்சனை, அதற்கான ஆதாரம் இதுவரையில் இல்லாததுதான்.

ஸ்மித்சோனியன் வெப்பமண்டல ஆராய்ச்சி நிறுவன தொல்பொள் ஆய்வாளரொருவர் கிடைக்கப்பெற்ற மீதிகள், சான்றுகள் மற்றும் ஆய்வறிக்கையில் மேற்கொண்டிருந்த நீண்ட கால ஆய்விலேயே இதை உறுதிப்படுத்தியுள்ளார்.

ஆய்வின் முடிவில், என்பு மீதிகளில் அக் காலத்திலோ அல்லது அதனை அண்டிய காலத்திலோ எந்தவொரு பௌதீகக் காயங்களுக்கான அடையாளங்களும் காணப்பட்டிருக்கவில்லை என உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

இது Lothrop தொல்லியலாளர் கூறியபடி இல்லையென்பதைக் காட்டிலும், அதற்கான வலிதான ஆதாரங்கள் இல்லை என்பதையே இவ் ஆய்வாளர் தெளிவுபடுத்துகின்றார்.

இப்புதைகுழியானது Lothrop மற்றும் அவரது குழுவினரால் 1951 இல் அகழ்தெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது 202 வன்கூடுகள் மற்றும் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டிருந்ததுடன், பின்வந்த ஆய்வாளர்களால் மேலும் 167 வன்கூடுகள் கண்டெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனையவை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers