அட்லாண்டிக்கில் கண்டுபிடிக்கப்பட்ட புதியவகை மீன் இனம்

Report Print Givitharan Givitharan in ஏனையவை

அட்லாண்டிக் கடலின் நடுப்பகுதியில், சுமார் 400 அடி ஆழத்தில் ஒரு புதியவகை மீனினமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இம் மீன் இனமானது கலிபோர்னியா சயன்ஜ் அக்கடமி ஆய்வாளர்களினாலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தற்போது இது தொடர்பான காணொளியொன்று வெளியாகியுள்ளது.

இதில் ஆய்வாளர்கள் பிரத்தியேகமாக அணிலின் கீச்சிடு தொனியில் கதைப்பது போன்றுள்ளது.

இது அவர்கள் சுவாசிப்பதற்காகப் பயன்படுத்தும் உபகரணத் தொகுதியிலுள்ள கீலியம் வாயு காரணமாகவே அவ்வகைத் தொனி ஏற்படுவதாக கூறப்படுகிறது.

அழகிய இளஞ்சிவப்பு நிறமான அம் மீனின் மேற்பரப்பில் மஞ்சள் நிறப் பட்டிகள் காணப்படுகின்றன.

இதில் ஆய்வாளர்களுக்கு மேலே ஒரு பெரிய சுறா நீந்திச்செல்வதையும் நீங்கள் இங்குள்ள காணொளியில் பார்வையிடலாம்.

மேலும் ஏனையவை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers