கடற்பறவை குடித்தொகையைக் கொன்றொழிக்கும் இராட்சதப் பல்லிகள்

Report Print Givitharan Givitharan in ஏனையவை
90Shares

தெற்கு அட்லான்டிக்கிலுள்ள ஒதுக்குப்புறமான தீவொன்றில் வாழும் இராட்சதப் பல்லிகள் அங்குள்ள கடற்பறவை இனங்களை மில்லியன் கணக்கில் கொன்றொழித்துவருவதாக தெரியவருகிறது.

மேலும் இது அங்குள்ள ஏனைய அரியவகை உயிரினங்களுக்கும் அச்சுறுத்தலாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் கஃப் தீவில் மேற்கொள்ளப்பட்டிருந்த ஆய்வொன்றிலேயே அச்சமூட்டும் இத் தகவல் வெளியாகியுள்ளது.

இங்குள்ள பெரிய எலிகள் அத் தீவை வாழிடமாகக்கொண்ட பறவைகளின் முட்டைகள், குஞ்சுகளை உணவாக்கிக்கொள்கின்றன.

இதன் காரணமாக அப் பறவைகளின் குடித்தொகைகள் முற்றாக அழிந்து போகும் வாய்ப்புள்ளதாக அச்சம் தெருவிக்கப்படுகிறது.

இதில் முக்கியமாக, அழிவடைந்துவரும் இனமான "அல்பட்ரோஸ்" எதுவித காப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாதவிடத்து விரைவில் அழிந்துபோகலாம் எனத் தெருவிக்கப்படுகிறது.

தற்போது 2020 ஆம் ஆண்டினுள் இவ் எலிகளின் குடித்தொகையை முற்றாக இல்லாதொழிப்பதற்கான நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுவருகின்றன.

கஃப் தீவானது கிட்டத்தட்ட 10 மில்லியன் பறவைகளின் வாழிடமாக விளங்குவது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனையவை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்