தற்போது பெண்கள் அதிகளவில் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகிவருகின்றனர்.
இதன் எதிரொலியாக #MeToo எனும் ஹேஸ் டேக் பயன்படுத்தி டுவிட்டரில் பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் தமது இன்னல்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
எனவே இவ்வாறானவர்களுக்கு தீர்வு தரும் வகையில் புதிய ஆடை ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆடையானது ஒருவர் எத்தனை தடவைகள் துஷ்பிரயோக நோக்கத்தில் நெருங்குகின்றார்கள் என்பதை கணக்கிட்டு சொல்லக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இதற்காக விசேட சென்சார்கள் உடை முழுவதும் பொருத்தப்பட்டுள்ளது.
மேலும் இந்த தகவலை Wi-Fi ஊடாக உடனடியாகவே பரிமாற்றம் செய்துகொள்ளும் வசதியும் காணப்படுகின்றது.