இன்ஸ்டாகிராமில் அதிக லைக் வாங்கி உலக சாதனை படைத்த முட்டை

Report Print Givitharan Givitharan in ஏனையவை

புகைப்படங்களை பகிரும் பிரபல்யமான தளமாக இன்ஸ்டாகிராம் விளங்குகின்றது.

இத் தளத்தில் பதிவேற்றப்பட்ட புகைப்படங்களிலே அதிக லைக் வாங்கிய படமாக ஒரு முட்டையின் படம் காணப்படுகின்றது.

இவ் வருடம் 5 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்ட இப் புகைப்படமானது இதுவரை 24 மில்லியனிற்கும் அதிகமாக லைக் செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 6 ஆம் திகதி போஸ்ட் செய்யப்பட்ட அமெரிக்க மொடலான Jenner என்பவரின் புதிதாக பிறந்த குழந்தையின் படம் விளங்கியது.

ஆனால் இந்த முட்டை தற்போது குழந்தையின் சாதனையை அசால்ட்டாக முறியடித்துள்ளது.

குழந்தையின் புகைப்படமானது இதுவரை 18 மில்லியன் லைக்குகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனையவை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்