கொழும்பின் சில பகுதிகளில் வாழும் மக்களுக்கு முக்கிய அறிவித்தல்

Report Print Kanmani in ஏனையவை

கொழும்பின் சில பகுதிகளில் 18 மணிநேர நீர்வெட்டு அமல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அந்தவகையில்,கொழும்பின் சில பகுதிகளில் இன்று (27) இரவு 10 மணி முதல் நாளை மறுதினம் (28) மாலை 4 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

கொழும்பு 13,14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதுடன், கொழும்பு 1, 11 மற்றும் 12 ஆகிய பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே,கொழும்பு பெருநகர் நீர் மற்றும் கழிவுநீர் முகாமைத்துவ வேலைத்திட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தப்பணிகள் காரணமாக நீர் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் ஏனையவை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்