நடன அழகிகளுக்கு வழங்கப்படும் ஊதியம் எவ்வளவு?

Report Print Jubilee Jubilee in ஏனைய விளையாட்டுக்கள்
நடன அழகிகளுக்கு வழங்கப்படும் ஊதியம் எவ்வளவு?

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் நடன அழகிகளுக்கு வழங்கப்படும் ஊதியம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐபிஎல் போட்டிகளில் ஒவ்வொரு அணியும் தங்களுக்கென நடன அழகிகளை ஒப்பந்தம் செய்திருப்பர். அவர்கள் தங்களது அசத்தலான நடனங்களால் ரசிகர்களை உற்சாகப்படுத்துவர்.

இதில் உள்ளூரை விட வெளிநாட்டு நடன அழகிகளுக்கே ஊதியம் சற்று அதிகமாக வழங்கப்படுகிறது. அணிகளை பொறுத்து இவர்களுக்கு வழங்கப்படும் ஊதியமும் வேறுபடுகிறது.

ஒரு போட்டிக்கு ரூ. 15 ஆயிரம் முதல் ரூ. 25 ஆயிரம் வரை இவர்கள் ஊதியமாக பெறுகின்றனர். தவிர, அவர்களின் அணி வெற்றி பெற்றுவிட்டால் அவர்களுக்கு சம்பளம் தவிர போனஸ் கிடைக்கும்.

அதேபோல் போட்டோ சூட், நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கு தனிப்பட்ட முறையில் ஊதியம் வழங்கப்படுகிறது.

கொல்கத்தா அணியின் நடன அழகிகளுக்கு இந்த சீசனில் 10 மடங்கு அதிகமாக ஊதியம் வழங்கப்படுகிறது, ஒரு போட்டிக்கு ரூ.12 ஆயிரம், போனஸாக ரூ. 3 ஆயிரம், மற்ற நிகழ்ச்சிகளுக்குரூ.12 ஆயிரம் வழங்கப்படுகிறது.

அதேபோல் பெங்களூர் அணியின் நடன அழகிகளுக்கு ஒரு போட்டிக்கு ரூ.10 ஆயிரமும், மும்பை அணியின் அழகிகளுக்கு ரூ.8 ஆயிரமும் ஊதியமாக வழங்கப்படுகிறது.

இவர்கள் ஒரு சீசனில் குறைந்தது 14 போட்டிகளில் பங்கேற்று ரூ.4 லட்சத்திற்கும் அதிகமாக சம்பாதிப்பர்.

சிலப் போட்டிகளில் இந்திய நடன அழகிகளும் பங்கேற்பர். அவர்களுக்கு ஒரு போட்டிக்கு ரூ.5000- 6000 ஊதியமாக வழங்கப்படுகிறது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments