ஷாரூக் கானுக்காகவும் ஒரு வீடியோ: அடங்காத பாகிஸ்தான் மொடல் நடிகை

Report Print Jubilee Jubilee in ஏனைய விளையாட்டுக்கள்
ஷாரூக் கானுக்காகவும் ஒரு வீடியோ: அடங்காத பாகிஸ்தான் மொடல் நடிகை

அப்ரிடி, கோஹ்லிக்காக வீடியோவை வெளியிட்டுக் கொண்டிருந்த பாகிஸ்தான் டிவி நடிகை குவாண்டீல் பலூச்சின் பார்வை தற்போது பாலிவுட் நடிகர் ஷாரூக் கான் மீது திரும்பியுள்ளது.

முன்னதாக டி20 உலகக்கிண்ணப் போட்டிகளில் இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தினால் முழு தேசத்திற்காகவும் நிர்வாண நடனம் ஆடத் தயாராக இருப்பதாக கூறி குவாண்டீல் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார்.

இதைத் தொடர்ந்து இந்திய அணியின் துணைத்தலைவர் விராட் கோஹ்லியை காதலிப்பதாக கூறி ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் தற்போது குவாண்டீல் பலூச், ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வரும் கொல்கத்தா அணியின் உரிமையாளர் மற்றும் பாலிவுட் நடிகரான ஷாரூக் கானை குறிவைத்துள்ளார்.

ஷாருக் கானுக்காக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ”பாலிவுட் சினிமாவின் ’கிங்’ கானுக்காக நான் ஒரு சிறப்பு தகவல் வைத்திருக்கிறேன்.

தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் உங்களின் கொல்கத்தா அணி வெற்றி பெற்றால் நீங்கள் மகிழ்ச்சியடையும் வகையில் அந்த வெற்றியை கொண்டாட கொண்டாடுவேன் என வாக்குறுதி அளிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments