முகம்மது அலி தமிழருக்கு கற்றுத்தரும் வரலாற்று பாடங்கள் என்ன?

Report Print Jubilee Jubilee in ஏனைய விளையாட்டுக்கள்
முகம்மது அலி தமிழருக்கு கற்றுத்தரும் வரலாற்று பாடங்கள் என்ன?

தனது 74 வயதில் மரணத்தைத் தழுவி இன்று இறுதிக்கிரிகை காணும் சாதனை வீரர் முகம்மது அலியின் வாழ்க்கை பல பாடங்களை வரலாறாக விட்டுச் செல்கிறது.

ஒடுக்குமுறைக்கு உள்ளான ஒரு மக்கள் குழுமத்தில் 1942ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 17ஆம் நாள் அமெரிக்காவின் லுயிஸ்வில் கென்டாக்கியில் பிறந்தவர் தான் கஸ்சியஸ் கிலே.

12 வயதில் இவருடைய துவிச்சக்கரவண்டி களவாடப்படுகின்றது. காவல்துறை அதிகாரி மாட்டின் இடம் சொல்லுகிறார். திருடியவரை நான் அடிக்கவேண்டும் என்று.

அதற்கு மாட்டின் முதலில் சண்டைபிடிப்பதற்கு கற்றுக் கொள் என்கிறார். குத்துச்சண்டை வீரர்களுக்கு பயிற்சி கொடுக்கும் காவல்துறை அதிகாரியான மாட்டின் இடமே பயிற்சி பெறுகிறார்.

சிறிது சிறிதாக குத்துச்சண்டையில் முன்னேறிய அவர் தனது 18 ஆவது வயதில் 1960ஆம் ஆண்டு இத்தாலியின் ரோமில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு தங்கப்பதக்கத்தை வென்று உலக கவனத்திற்கு வருகின்றார்.

1964இல் சொனி லிஸ்டனை வீழ்த்தி உலக அதிபார குத்துச்சண்டை வீரர் என்ற பட்டத்தை தனதாக்கிக் கொள்கிறார் உலகத்திற்கு கஸ்சியஸ் கிலே என அறிமுகமாகிய முகம்மது அலி.

தனது பெயர் தன்னை அடிமையாக வைத்திருந்தவர்களால்கொடுக்கப்பட்ட பெயர். நான் யாருக்கும் அடிமைப்பட்டவன் கிடையாது. ஆகவே அவர்கள் தந்த பெயரை அவர்களுக்கே திரும்பிக் கொடுத்து விடுகின்றேன். எனது பூர்வீகமான ஆப்பிரிக்க பெயரை வரித்துக்கொள்கிறேன் என தனது பெயரை முகம்மது அலி எனக் மாற்றி கொள்கிறார். அத்துடன் இஸ்லாத்தையும் தழுவிக் கொள்கிறார்.

"Cassius Clay is a name that white people gave to my slave master. Now that I am free, that I don't belong anymore to anyone, that I'm not a slave anymore, I gave back their white name, and choose a beautiful African one."

தனது பூர்வீகத்தில் பெருமை கொள்ளும் அலி இன்று பூர்வீகத்தை தவிர்த்து பல்வேறு பெயர்களுக்குள் ஒழித்துக் கொள்ள முயலும் தெளிவான ஒரு அடிப்படையை சொல்லித் தருகின்றார்.

உலகத்தால் அறியப்பட்ட பெரும் வீரராக மாறியுள்ள நிலையில் பெரும் பணம் அவரை சுற்றி குவிந்து வரும் நிலையில் வியட்நாம் சென்று போரிட இராணுவத்தில் இணைய அவருக்கு கட்டாய அழைப்பு வருகிறது. வரமுடியாது என்கிறார். இன்னொரு மக்களை அடிமைப்படுத்த நான் வரமுடியாது என்கிறார்.

நாங்களே இந்த நாட்டில் நாய்கள் போல நடத்தப்படுகின்றோம். மறுத்தால் சிறையில் போடுவதானால் சிறையில் போடுங்கள். நானும் என் இனமும் 400 ஆண்டுகளாக இந்த நாட்டில் சிறையில் தான் இருக்கின்றோம் என்கிறார்.

“Why should they ask me to put on a uniform and go 10,000 miles from home and drop bombs and bullets on Brown people in Vietnam while so-called Negro people in Louisville are treated like dogs and denied simple human rights? No I’m not going 10,000 miles from home to help murder and burn another poor nation simply to continue the domination of white slave masters of the darker people the world over. This is the day when such evils must come to an end. I have been warned that to take such a stand would cost me millions of dollars. But I have said it once and I will say it again. The real enemy of my people is here. I will not disgrace my religion, my people or myself by becoming a tool to enslave those who are fighting for their own justice,freedom and equality. If I thought the war was going to bring freedom and equality to 22 million of my people they wouldn’t have to draft me, I’d join tomorrow. I have nothing to lose by standing up for my beliefs. So I’ll go to jail, so what? We’ve been in jail for 400 years.”

பணம், புகழ் வருகின்ற போது அதை காத்துக் கொள்ள எதையும் செய்ய முயலும் எமக்கு இல்லை வாழ்வில் சில அடிப்படை விடயங்களை எதற்கும் விட்டுக்கொடுக்க கூடாது என்கின்ற வரலாற்றுப் பாடத்தை ஆணித்தரமாக கற்றுத்தருகிறார் அலி.

இதனால் 1967இல் அவரின் பட்டங்கள் அவரிடம் இருந்து பறிக்கப்படுகின்றன. நீதி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்படுகின்றது. ஆனால் அலி துவண்டுவிடவில்லை.

மேல்முறையீடு செய்கின்றார். 5 ஆண்டுக் கழித்து அதில் வெற்றியும் பெறுகின்றார். மீண்டும் பறிக்கப்பட்ட உலக குத்துச்சண்டை பட்டத்தை தனதாக்கியும் கொள்கிறார். தனது உலகப்புகழ் நிலையை தனது மக்கள் சார்ந்த வலுநிலையாகவும் மாற்றிக் கொள்கிறார்.

இன்று உலகப் பூமிப்பந்தில் 10 லட்சத்துக்கு மேல் இடம்பெயர்ந்துள்ள ஈழத்தமிழர்களாகிய நாம் ஏதோ ஒரு துறையில் உச்ச நிலையை அடைவோமாக இருந்தால் அதனை எமது மக்கள் சார்ந்த வலுநிலையாக மாற்றிக் கொள்ள முடியும்.

அந்த வகையில் மாயாவின் வளர்ச்சியும் வலுநிலை மட்டுமே நாம் இதுவரை சாதித்துள்ளோம் எமது இளையவர்கள் சாதனைக் களங்களை நோக்கி எல்லாத்துறைகளிலும் உற்சாகப்படுத்தப்பட்டு வளப்படுத்தப்படவேண்டும்.

அதை எட்டுவதற்கு வெறும் பயிற்சி மற்றும் நுணுக்கங்கள் மட்டும் தெரிந்தால் போதாது அதற்கான உளவலுவையும் கொண்டிருக்க வேண்டும் என்கிறார்.

"Champions aren't made in gyms,champions are made from something they have deep inside them - a desire, adream, a vision. They have to have last-minute stamina, they have to be alittle faster, they have to have the skill and the will. But the will must bestronger than the skill."

தனது வாழ்க்கையில் தற்துணிவு கொண்டு மு ன்நகர்ந்தால் வாழ்க்கையில் எதனையும் சாதிக்க முடியும் என்கிறார் ஆணித்தரமாக.

அதே நேரம் தனது தேடுதலை விரிவாக்கி பயணிக்க முயலாதவனால் எந்த இலக்கையும் அடைய முடியாது என்கிறார். நாட்களை எண்ணி வாழ்க்கையை போக்காதே நாட்கள் உன்னை எண்ண வை என்கிறார்.

ஒரு கணம் கண்களை மூடிக்கொண்டு எங்கள் மாவீரர்களையு ம்தேசியத்தலைமையையும் உங்கள் மனக்கண்ணில் கொண்டு வாருங்கள். அலியின் வார்த்தைகளில் அவர்களை காணுவீர்கள்.

அவர்கள் வழிவந்த நாமும் சாதிக்கவேண்டாமா? எம்மக்களின் வலுநிலையாக இப்பூமிபந்தில் மாறவேண்டாமா? ஒவ்வொரு சாதனையாளரும் பல வரலாற்றுப்பாடங்களை எம்மிடையே விட்டே செல்கின்றனர்.

வரலாறுகளை கற்றுக் கொள்ளுகின்ற கைக்கொள்கின்ற இனமாக எப்போதும் இருந்து கொள்வோமேயானால் எம்மாலும் வரலாறுகளைப்படைக்க முடியும்.

  • "He who is not courageous enough to take risks will accomplish nothing in life."
  • "The man who has no imagination has no wings."
  • "Don’t count the days; make the days count."

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments