ரியோவில் ஊக்கமருந்தில் சிக்கினால் கடும் நடவடிக்கை: கென்யா துணை ஜனாதிபதி

Report Print Arbin Arbin in ஏனைய விளையாட்டுக்கள்
ரியோவில் ஊக்கமருந்தில் சிக்கினால் கடும் நடவடிக்கை: கென்யா துணை ஜனாதிபதி

ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் வீரர்- வீராங்கனைகளுக்கு அதிக அளவு ஊக்கத்தொகை அளிக்கப்படும் என்று கென்யா அரசு அறிவித்துள்ளது.

நடுத்தர மற்றும் நெடுந்தூர ஓட்டப்பந்தயத்தில் ஆதிக்கம் செலுத்தும் நாடுகளில் கென்யாவும் ஒன்று. இந்த நாட்டைச் சேர்ந்தவர்களை 1000 மீற்றர், 5 ஆயிரம் மீற்றர், 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் வெல்வது கடினம்.

இவ்வாறு ஓட்டப்பந்தயத்திற்கு பெயர்போன கென்யா தற்போது சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளது. அந்நாட்டின் 40-க்கும் மேற்பட்ட தடகள வீரர்-வீராங்கனைகள் ஊக்கமருந்து விவகாரத்தில் சிக்கியுள்ளனர். இதனால் கென்யா நாட்டிற்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இதை தவிர்க்கும் வகையில் அடுத்த மாதம் பிரேசில் நாட்டில் நடைபெற இருக்கும் ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் வீரர்-வீராங்கனைகளுக்கு அதிக அளவில் ஊக்கத்தொகை கொடுக்கப்படும், அதேவேளையில் ஊக்கமருந்து விவகாரத்தில் சிக்கினால் கடும் தண்டனை கொடுக்கப்படும் என்று அந்நாட்டின் துணை ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

கென்யாவில் ஒலிம்பிக் சோதனை போட்டி நேற்று தொடங்கியது. இந்த போட்டியை தொடங்கி வைத்த துணை அதிபர் ரூட்டோ பேசுகையில், ஊக்கமருந்து முறைகேட்டில் ஈடுபட்டால் அவர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படும்.

அத்துடன் 3 மில்லியன் கென்யா ஷில்லிங் (29721 டொலர்கள்) அபராதம் விதிக்கப்படும். இந்த தண்டனை எதற்கென்றால், மக்களை தவறான வழிக்கு கொண்டு செல்ல காரணமாகிவிடக்கூடாது என்பதற்காகத்தான்.

மேலும், ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வெல்லும் வீரர்- வீராங்கனைகளுக்கு 10 லட்சம் ஷில்லிங்கும், வெள்ளிப்பதக்கம் வெல்பவர்களுக்கு 7,50,000 கென்யா ஷில்லிங்கும்,

வெண்கலப் பதக்கம் வெல்பவர்களுக்கு 5 லட்சம் ஷில்லிங்கும் வழங்கப்படும். வெற்றி பெறும் அணிகளுக்கு 5 லட்சம் ஷில்லிங் வழங்கப்படும் என்றார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments