விம்பிள்டனிலிருந்து வெளியேற்றப்பட்டார் ஜோகோவிச்!

Report Print Basu in ஏனைய விளையாட்டுக்கள்
விம்பிள்டனிலிருந்து வெளியேற்றப்பட்டார் ஜோகோவிச்!

லண்டனில் நடந்து வரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில், உலகின் ரெனிஸ் தரப்பட்டியலில் முதல் ரேங்க் பெற்ற, தற்போதைய விம்பிள்டன் சாம்பியனான, நோவக் ஜோகோவிச், அமெரிக்க வீரர் சாம் குயரேயிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்து விம்பிள்டன் போட்டிகளிலிருந்து வெளியேறினார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில், நடப்பு சாம்பியன் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், அமெரிக்காவின் சாம் குயரே மோதினர்.

டென்னிஸ் தரப்பட்டியலில் 28வது இடத்தில் இருக்கும் குயரே , 7-6 ( 8-6), 6-1, 3-6, 7-6 (7-5) என்ற கணக்கில் ஜோகோவிச்சைத் தோற்கடித்தார்.

கிராண்ட்ஸ்லாம் அரங்கில் தொடர்ச்சியாக 30 போட்டிகளில் வெற்றி கண்ட அவரின் வெற்றி நடை முடிவுக்கு வந்தது.

கடந்த ஏழாண்டுகளில் ஒரு கிராண்ட் ஸ்லாம் போட்டியின் இரண்டாவது வாரத்துக்குள் செல்ல ஜோகோவிச் தவறுவது இதுவே முதல்முறையும் கூட.

இந்த விம்பிள்டன் போட்டியில் மூன்றாவது முறையாக தொடர்ந்து வென்று, இந்த காலண்டர் ஆண்டில் மூன்றாவது முறையாக ஒரு கிராண்ட் ஸ்லாம் போட்டியை வென்ற பெருமையைப் பெறலாம் என்று ஜோகோவிச்சின் கனவு கலைந்தது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments