கனடாவில் சிறப்பாக நடைபெற்ற கோடைகால விளையாட்டு போட்டி - 2016

Report Print Gowsic Thevendran in ஏனைய விளையாட்டுக்கள்

கனடாவின் மொன்றியலில் நியூ ஸ்டார் விளையாட்டு கழகத்தின் சார்பில் கோடைகால விளையாட்டு போட்டி சிறப்பாக நடந்துமுடிந்துள்ளது.

Volleball Tournament - 2016 என்ற இந்த விளையாட்டு போட்டியில் மொத்தம் 8 குழுவினர் கலந்துகொண்டு இந்த போட்டியை சிறப்பித்துள்ளனர்.

இதில், கைப்பந்தாட்ட போட்டியில் Vezina Boys அணியினர் சிறப்பாக விளையாடி பரிசினை தட்டிசென்றனர். இந்த கோடைகால விளையாட்டு போட்டியில் கைப்பந்து போட்டி மட்டுமின்றி, முகத்தில் ஓவியம் வரைதல், பலூன் சவாரி போன்ற சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகளும் நடைபெற்றுள்ளன.

கயிறு இழுத்தல் போட்டி, தடகளப் போட்டி, கேரம் போர்டு என பல்வேறு போட்டிகளோடு களைகட்டிய இந்த விளையாட்டு போட்டியில் தமிழ் கனடிய அரசியல்வாதிகளும் பார்வையாளர்களாக கலந்துகொண்டு சிறப்பித்துள்ளனர்.

இந்நிகழ்வுக்கு லங்காசிறி ஊடக அனுசரனை வழங்கியுள்ளது. உங்களுடைய நிகழ்வுகளுக்கும் ஊடக அனுசரணை வேண்டும் என்றால் pr@lankasri.com மின்னஞ்சலை தொடர்பு கொள்ளவும்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments