உசைன் போல்ட்டின் சவால்.. கென்யா வீரரின் 52 ஆண்டுகால சாதனை: ரியோ ஒலிம்பிக் துளிகள்

Report Print Jubilee Jubilee in ஏனைய விளையாட்டுக்கள்
உசைன் போல்ட்டின் சவால்.. கென்யா வீரரின் 52 ஆண்டுகால சாதனை: ரியோ ஒலிம்பிக் துளிகள்

ரியோ ஒலிம்பிக் போட்டியில் இன்று நடந்த கிரேக்கோ - ரோமன் மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் ஹர்தீப் சிங் தோல்வியடைந்து ஏமாற்றம் அளித்தார்.

மகளிருக்கான சங்கிலி குண்டு எறிதல் போட்டியில் போலந்து வீராங்கனை அனிட்டா விலோடர்ரைக் 82.29 மீற்றர் தூரம் எறிந்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

ஒலிம்பிக் பார்க் மைதானத்தில் ஸ்பைடர் கமெராவின் வயர் அறுந்து, கமெரா மைதானத்தில் விழுந்து விபத்து ஏற்பட்டதில் 7 பேர் காயம் அடைந்தனர்.

ரியோ ஒலிம்பிக்கில் இன்று நடந்த ஆடவர்களுக்கான போல்வால்ட் பந்தயத்தில் பிரேசில் வீரர் டியோகோ டி சில்வா 6.03 மீற்றர் உயரம் தாண்டி புதிய ஒலிம்பிக் சாதனை படைத்தார்.

மகளிருக்கான வட்டு எறியும் பந்தயத்தில் இந்திய வீராங்கனை சீமா அண்டில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தார்.

ரியோ ஒலிம்பிக் 400 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் உலக சாதனை படைத்த தென்ஆப்பிரிக்காவின் வேட் வான் நிகெர்க்கை 300 மீற்றர் ஓட்டத்தில் தன்னுடன் ஓடத் தயாரா? என்று உசேன் போல்ட் சவால் விட்டுள்ளார்.

ரியோ ஒலிம்பிக் 800 மீற்றர் ஓட்டத்தில் கென்ய வீரர் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம் தொடர்ந்து 2 முறை தங்கம் வென்று 52 வருட சாதனையை முறியடித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments