காயம் அடைந்த வீராங்கனைக்கு உதவிய சக வீராங்கனை: பார்வையாளர்களை நெகிழ வைத்த நிகழ்வு

Report Print Arbin Arbin in ஏனைய விளையாட்டுக்கள்
காயம் அடைந்த வீராங்கனைக்கு உதவிய சக வீராங்கனை: பார்வையாளர்களை நெகிழ வைத்த நிகழ்வு

ரியோவில் பெண்களுக்கான 5000 மீட்டர் தூர ஓட்டப் பந்தயத்தின்போது தான் இந்த நெகிழ வைக்கும் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

போட்டியின் 2-வது அரையிறுதியில் அமெரிக்காவின் அப்பே டி'அகோஷ்டினோ, நியூசிலாந்தின் நிக்கி ஹம்ப்ளின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

போட்டியில் மும்முரமாக ஓடிக்கொண்டிருக்கும் போது இருவரும் திடீரென எதிர்பாராத விதமாக மோதிக் கொண்டார்கள். இதில் அமெரிக்க வீராங்கனையின் கணுக்காலில் காயம் ஏற்பட்டது.

இதனால் மனமுடைந்த நியூசிலாந்து வீராங்கனை அவரை அருகில் சென்று நலம் விசாரித்தார். போட்டியில் கலந்து கொள்ள முடியவில்லை என்றால் ஒதுங்கிக் கொள்ளுங்கள் என்றார்.

ஆனால், அமெரிக்க வீராங்கனை அதற்கு மறுத்து விட்டார். தன் மனவலிமையால் எழுந்து மீண்டும் ஓடினார். ஆனால் சில மீற்றர் தூரம் சென்றதும் மீண்டும் கிழே விழுந்தார்.

இதனால் நியூசிலாந்து வீராங்கனை மனமுடைந்தார். திரும்பவும் அமெரிக்க வீராங்கனையிடம் வந்து ஆறுதல் கூறினார். இறுதியில் ஒரு வழியாக 5000 மீற்றரை கடந்தார் அமெரிக்க வீராங்கனை.

பின்னர் அவரால் நடக்க முடியாமல் திணறியதால் சக்கர நாற்காலியில் அழைத்துச் செல்லப்பட்டார்.

முன்னதாக நியூசிலாந்து வீராங்கனை 15-வது நபராக வந்து அமெரிக்க வீராங்கனைக்காக காத்திருந்தார். 16-வதாக வந்த பின்னர் அவரை கட்டிப்பிடித்து தனது ஆறுதல் மற்றும் வருத்தத்தை தெரிவித்தது பார்வையாளர்களை நெகிழ்ச்சி கொள்ள வைத்தது.

இந்த ஓட்டப் பந்தயத்தில் எத்தியோப்பாவின் அல்மாஸ் அயனா 15:04 நிமிடங்களில் பந்தய தூரத்தை கடந்து தங்கம் வென்றார். ஆனால் இதற்கு முன்னர் நடந்த போட்டி ஒன்றில் 15:03 நிமிடங்களில் பந்தய தூரத்தை கடந்து சாதனை படைத்திருந்த அமெரிக்காவின் டி'அகோஷ்டினோ இந்த முறை 17:10 நிமிடங்களில் கடந்து கடைசி இடத்தை பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments