ரியோவில் இருந்து நாடு திரும்பிய வீராங்கனைக்கு ஜிகா தொற்று? தனி அறையில் சிகிச்சை

Report Print Basu in ஏனைய விளையாட்டுக்கள்
273Shares
273Shares
ibctamil.com

ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்று நாடு திரும்பிய இந்திய தடகள வீராங்களை உடல் நலக்குறைவால் பெங்களூரு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட அறையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

ரியோ ஒலிம்பிக்கில் தடைதாண்டும் போட்டியில் பங்கேற்ற இந்திய வீராங்கனை சுதா சிங்(வயது-30) கடந்த சனிக்கிழமை நாடு திரும்பியுள்ளார்.

பின்னர், மூட்டு வலி மற்றும் சோர்வால் அவதிப்பட்டு வந்த சுதா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

அவரை பரிசோதித்த டாக்டர்கள் சுதாவின் இரத்த மாதிரிகளை ஜிகா சோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இதுகுறித்து டாக்டர்கள் கூறியதாவது, சுதா ஜிகா தொற்று நிறைந்த பிரேசிலில் இருந்ததால் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.

இது ஒரு சாதரண வைரஸ் தொற்றாக இருக்கலாம். ஆனால், இது ஜிகா தொற்று இல்லை என்பதை உறுதி செய்யவே நாங்கள் இரத்த மாதிரிகளை சோதனைக்கு அனுப்பி வைத்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளனர்.

பிரேசிலில், சுதாவுடன் தங்கியிருந்த மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர்கள் Jaisha, கவிதா ராத்வுக்கும் இது போன்ற வைரஸ் தொற்று அறிகுறிகள் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தற்போது சுதா நல்ல நிலைக்கு திரும்புவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

கொசுக்களால் பரவும் ஜிகா வைரஸ் தொற்றால் பிறக்கும் குழந்தை குறைபாடுகளுடன் பிறக்கும். பின்னர், நரம்பியல் கோளாறுகளும் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments