நடிகர் ஷாருக்கான் அப்படி ஏதும் செய்யவில்லை

Report Print Jubilee Jubilee in ஏனைய விளையாட்டுக்கள்

ஐபிஎல் போட்டியில் பாதுகாப்பு ஊழியருடன் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் நடிகர் ஷாருக்கான் மீது எந்த தவறும் இல்லை என்று மும்பை பொலிசார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2012ம் ஆண்டு மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது.

இந்தப்போட்டியின் போது மைதானத்தில் கொல்கத்தா அணியின் உரிமையாளர் ஷாருக்கானுக்கும், பாதுகாப்பு ஊழியருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து மும்பை வான்கடே மைதானத்தில் நுழைய ஷாருக்கானுக்கு 5 ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இந்த தடையை கடந்த ஆண்டு மும்பை கிரிக்கெட் சங்கம் நீக்கியது.

இந்த சம்பவம் தொடர்பாக ஷாருக்கான் மீது நடவடிக்கை எடுக்ககோரி பாதுகாப்பு ஊழியரின் நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு விசாரணை நேற்று நீதிமன்றத்திற்கு வந்தது. அப்போது ஷாருக்கானிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையிலான அறிக்கையை மும்பை பொலிசார் நீதிமன்றத்தில் சமர்பித்தனர்.

அதில், ஷாருக்கான் மீது எந்த தவறும் இல்லை என்றும், அவர் எந்தவிதமான குற்ற செயல்களிலும் ஈடுபடவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments