சாக்ஷி மாலிக்கின் அடுத்த இன்னிங்ஸ்

Report Print Deepthi Deepthi in ஏனைய விளையாட்டுக்கள்

ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக்(24) தனது வாழ்க்கையில் அடுத்த இன்னிங்சுக்குள் நுழைகிறார்.

அவரும், சக மல்யுத்த வீரர் சத்யவார்ட் காடியனும் காதலித்து வந்தனர். ஒன்றாக மல்யுத்த போட்டிகளில் பங்கேற்ற போது அவர்களுக்குள் காதல் மலர்ந்தது.

சத்யவார்ட், சாக்ஷியை விட 2 வயது இளையவர். இவர் 2010-ம் ஆண்டு இளையோர் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று இருக்கிறார். இவர்களது திருமணத்திற்கு பெற்றோர் பச்சைக்கொடி காட்டினர்.

இதையடுத்து சாக்ஷி-சத்யவார்ட் திருமண நிச்சயதார்த்தம் அரியானா மாநிலம் ரோட்டாக்கில் உள்ள சாக்ஷி மாலிக்கின் இல்லத்தில் நேற்று நடந்தது. இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மட்டும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

திருமண திகதி விரைவில் அறிவிக்கப்படும் என பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments